9.01.2009

வாழ்க்கை நிறையப் பொய்



நிஜங்கள்
என்னை
காட்டிக்கொடுக்கின்றன
பொய்கள்தான்
காப்பாற்றி விடுகின்றன....



உண்மை
சொல்வதை விடவும்
பொய் சொல்லவே
அதிகம்
தைரியம் தேவை
என்றாலும்....
எந்தக் கோழையும்
சுலபமாய்ச்
சொல்லிவிடுகிறான்
பொய்யை....


காதலைச் சொல்ல
தைரியம்
இல்லாதவர்களுக்கு
கூட
இதுவரை
காதலிக்கவேயில்லை
என்று
பொய் சொல்ல
தைரியம்
எப்படியோ
வந்துவிடுகிறது


குடித்து விட்டு
வீட்டுக்கு
வந்து
சொன்னேன்...
நண்பனுக்காகவே
கொஞ்சம்
குடித்தேன்!
அந்த நண்பன்
வீட்டிலும்
அதே பொய்....


பொய் சொல்லிவிட்டு
கடவுளே
மன்னித்துவிடு
என்று
வேண்டும்போது
எந்தக் கடவுளும்
இதுவரை வந்து
மன்னிப்புக்
கொடுக்காவிட்டாலும்
செய்த பிழை
நீங்கி விட்டதாய்
சந்தோசப்படுகிறது
மனசு....
இதற்காகவே
ஆத்திகனாக
இருக்கிறார்கள்
நிறையப் பேர்


மற்றவர்களோடு
இருக்கும் போது
சொல்கிற
பொய்களை
எண்ணி
தனிமையில்
இருக்கும் போது
வருத்தப்படுகிற
சாதாரண
மனிதன்தான்
நானும் ...

எத்தனை
மனிதர்களை
பொய் சொல்லி
ஏமாற்றி இருந்தாலும்
என்
மனச்சாட்சியை
ஒருமுறை கூட
ஏமாற்ற
முடிந்ததில்லை...


கவிதைக்கு
மட்டுமல்ல
வாழ்க்கைக்கும்
பொய் அழகு
சிலவேளைகளில்....


பொய்
சொல்வெதெல்லாம்
ஒரு
பொழைப்பா
என்று
திட்டுபவர்களே
கொஞ்சம்
சொல்லித்தாருங்கள்
பொய்
சொல்லாமல்
வாழ்வெதப்படி....?










4 comments:

Beski said...

பொய் சொல்லாமல் வாழ்வது கஷ்டமல்ல, பொய் சொல்லியே வாழ்ந்துவிட்டுப் பின் பொய் சொல்லாமல் வாழ நினைத்தால் அதுதான் கஷ்டம்.
ஆனால், பொய் சொல்லாமல் வாழ்பவர்களெல்லாம் இதெல்லாம் ஒரு பொழப்பா என்று யாரையும் கேட்க மாட்டார்களென்றே தோன்றுகிறது.

மற்றபடி, இதெல்லாம்...
//நிஜங்கள்
என்னை
காட்டிக்கொடுக்கின்றன
பொய்கள்தான்
காப்பாற்றி விடுகின்றன....//

//எந்தக் கோழையும்
சுலபமாய்ச்
சொல்லிவிடுகிறான்
பொய்யை....//

//அந்த நண்பன்
வீட்டிலும்
அதே பொய்....//

//இதற்காகவே
ஆத்திகனாக
இருக்கிறார்கள்
நிறையப் பேர்//
சூப்பர், நச்.

மொத்தத்தில் நல்லாயிருக்கு.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//காதலைச் சொல்ல
தைரியம்
இல்லாதவர்களுக்கு
கூட
இதுவரை
காதலிக்கவேயில்லை
என்று
பொய் சொல்ல
தைரியம்
எப்படியோ
வந்துவிடுகிறது//
இந்த வரி நல்லா இருக்கு மயாதி . எங்கே யாருக்குப் பொய் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்?ஹா ஹா ஹா ....

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

பொய்யை குறித்து மெய் பேசிய கவியே! பிடியுங்கள் பொற்கிழி (ஐய் இதுவும் போய்த்தான்!!!!) அருமை! (இது மெய் ?)

Anonymous said...

பொய்யை பாராட்டி பெய்யென பொய்த மழை கவிதை மழை....