8.29.2009

என் காதல் பக்கம்



கொஞ்சம் கொஞ்சமாய்
பழகிய
வாழ்க்கை....
ஒரு நொடி
விபத்தில்
முடிந்துபோகலாம்....


கொஞ்சம் கொஞ்சமாய்
சேர்த்து
வைத்த
நட்பு
ஒரு வார்த்தையில்
முடிந்துபோகலாம்


கொஞ்சம் கொஞ்சமாய்
சேர்த்து வைத்த
மானம்
ஒரு குற்றத்தில்
முடிந்துபோகலாம்


கொஞ்சம் கூட
சேமிக்கவில்லை
முடிந்து போனது
ஏதோ ஒன்று!
உன் பார்வையில்...


உயிரும்
இருக்கிறது
உடலும்
அப்படியேதான்
இருக்கிறது...
வாழத்தான்
முடியவில்லை


இத்தனை நாளாய்
உயிரும் உடலும்தான்
`நான்` என்றிருந்தேன்
இரண்டுக்கும் அப்பாலும்
`நான் ` இருக்கிறேன்
என்று
நீதான்
வெளிப்படுத்தினாய்....

******************************


நீ பொக்கிஷம்!

பொத்தி வைக்க
முடியாமல்
கொட்டிவிடுகிற
கவிதைகளை
பொறுக்கி எடுக்கிறேன்
நீயோ
`பொறுக்கி` என்று
திட்டுகிறாய்
மற்றவர்களோ
கவிஞன்
என்கிறார்கள்...

************************


எத்தனை
முறைதான்
சேமிப்பது....
இடம் போதாமல்
உன் அழகு
நிரம்பி வழிகிறது
என் கண்களில்


நான்
சிவனாகப்
பிறந்திருக்கலாம்
நெற்றிக் கண்ணாவது
கொஞ்சம்
இடம் தந்து
உதவியிருக்கும்....

************************


நீ காதலைப்
பிரசவித்துவிட்டு
காதலிக்காமல்
போய் விட்டாய்....


நம் காதல்
`குழந்தையை`
வாழ
வைப்பதற்காகவேனும்
உயிவாழ
வேண்டிய
கட்டாயத்தில்
இருக்கிறேன்
நான்

***********************


என்
கவிதை மொட்டுக்கள்
காத்திருக்கின்றன!


நீ வருகின்றாய்
பூக்கின்றன
நீ போகின்றாய்
வாடிப்போகின்றன .....


பசி வந்தால்
பத்தும் பறக்கும்
நீ வந்தால்
பசியும்
பறக்கும்....


நீ
வரும் போது
என்னை கொண்டு
வருகின்றாய்
போகும்போது
கொன்று
போகின்றாய்

*********************


நான் என்பது
நரகம்...
நீ இல்லாமல்

சொர்க்கத்தில்
இருப்பவர்கள் கூட
மீண்டும்
பிறக்க
ஆசைப்படுகிறார்கள்
நீ இருக்கின்ற
உலகத்தை விடவா
சொர்க்கம்.....

*********************


நீ
பறித்த
பூ
இறுதிவரை
வாடவேயில்லை....
நீ பறிக்காத
பூ வாடிவிட்டது
நீ
பறிக்கவில்லை
என்ற
ஏக்கத்தில்...


பூவாக
இருந்தாலும்
ஆணாக
இருந்தாலும்
வாடித்தான்
போகவேண்டியிருக்கு
காதலில் ......

*****************













13 comments:

யாழினி said...

வாவ்! மயாதி நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் பதிவுலகில்.

உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை!

//நீ பொக்கிஷம்!

பொத்தி வைக்க
முடியாமல்
கொட்டிவிடுகிற
கவிதைகளை
பொறுக்கி எடுக்கிறேன்
நீயோ
`பொறுக்கி` என்று
திட்டுகிறாய்
மற்றவர்களோ
கவிஞன்
என்கிறார்கள்...//

இந்த வரிகள் மிகவும் அழகாக உள்ளன மயாதி!

நட்புடன் ஜமால் said...

கொஞ்சம் கூட
சேமிக்கவில்லை
முடிந்து போனது
ஏதோ ஒன்று!
உன் பார்வையில்...]]

அருமைப்பா.

S.A. நவாஸுதீன் said...

உயிரும் உடலும்தான்
`நான்` என்றிருந்தேன்
இரண்டுக்கும் அப்பாலும்
`நான் ` இருக்கிறேன்
என்று
நீதான்
வெளிப்படுத்தினாய்....
************
ரொம்ப நல்லா இருக்கு மயாதி

sakthi said...

இத்தனை நாளாய்
உயிரும் உடலும்தான்
`நான்` என்றிருந்தேன்
இரண்டுக்கும் அப்பாலும்
`நான் ` இருக்கிறேன்
என்று
நீதான்
வெளிப்படுத்தினாய்....

வாவ் அருமை மயாதி

நாணல் said...

//கொஞ்சம் கூட
சேமிக்கவில்லை
முடிந்து போனது
ஏதோ ஒன்று!
உன் பார்வையில்...//

//இத்தனை நாளாய்
உயிரும் உடலும்தான்
`நான்` என்றிருந்தேன்
இரண்டுக்கும் அப்பாலும்
`நான் ` இருக்கிறேன்
என்று
நீதான்
வெளிப்படுத்தினாய்....//

//பூவாக
இருந்தாலும்
ஆணாக
இருந்தாலும்
வாடித்தான்
போகவேண்டியிருக்கு
காதலில் ......//

மிகவும் ரசித்தேன்... எல்லா கவிதைகளும் அருமை... முக்கியமாக மேலே உள்ள மூன்று கவிதைகளை நான் மிகவும் ரசித்தேன்.... :))

FunScribbler said...

பூவாக
இருந்தாலும்
ஆணாக
இருந்தாலும்
வாடித்தான்
போகவேண்டியிருக்கு
காதலில் ......

woooooowwwwwww....superbbbbb lines! keep rocking:)

ப்ரியமுடன் வசந்த் said...

//உயிரும்
இருக்கிறது
உடலும்
அப்படியேதான்
இருக்கிறது...
வாழத்தான்
முடியவில்லை//

ப்ச்...

அருமையான காதல் வரிகள்

பாலா said...

welcome back

kavithaikal aththanaiyum top

மயாதி said...

நன்றி

யாழினி
நட்புடன் ஜமால்
S.A. நவாஸுதீன்
sakthi
நாணல்
Thamizhmaangani
பிரியமுடன்...வசந்த்
பாலா

அப்துல்மாலிக் said...

முழுதும் ரசித்தேன்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கவிதைகள் கலக்குகிறது. காதல் வசப் பட்டதால் நேரமில்லையா? அல்லது வேலை வாழ்க்கையை உறிஞ்சுகிறதா????

அன்புடன் அருணா said...

எந்த வார்த்தையை எடுத்துக்காட்ட? ஒவ்வொன்றுமே அருமையாய்!பூங்கொத்து!

T.V.ராதாகிருஷ்ணன் said...

கவிதைகள் அனைத்தும் அருமை