8.10.2009

ஒரு காதல் கடிதம்நீ
எங்கேயோ
இருந்தாலும்
இங்கேதான்
இருக்கிறாய்.....

நீயோ
தொலைத்துவிட
துடிக்கின்றாய்
நானோ
காப்பாற்றிவிட
துடிக்கிறேன்

உனக்கும்
எனக்குமான
இடைவெளியை....

தூரங்களில்
தொலைவதல்ல
தூரங்களை
தொலைப்பதுதான்
காதல்


************************

உன்னைப்
பத்திரப்படுத்துவதற்காகவே
பக்கத்தில்
வைத்திருக்க
ஆசைப்படுகிறேன்....

நீ உறங்கும்
பொழுதுகளில்
விழித்திருப்பேன்
உன்
உறக்கம் களையாமல்
பார்த்துக்கொள்வதற்காக...

******************************

புன்னகையை
தொலைப்பது
வதம்...

உன் புன்னகையில்
தொலைவது
வரம்...

******************

உன் ஒருநாள்
சந்தோஷத்திற்காக
என் ஆயுளின்
சந்தோசத்தையே
அடகு வைப்பேன்...

******************

உன் மௌனங்களில்
தற்கொலை செய்யும்
வார்த்தைகளை
காப்பாறிக்
கொள்வதற்காகவே
நான் கவிதை
எழுதக் கற்றுக்கொண்டேன்...


*********************
என்றோ
இறந்துவிட்ட
என்னுள்
என்றோ
உனக்காக
சேமித்து
வைத்த
உயிர்த்துளிதான்
இன்னும்
துடித்துக் கொண்டிருக்கிறது...

நீ காதலித்து விடுவாய்
என்ற நம்பிக்கையில்தான்
இன்னும் உயிர்வாழ்ந்து
கொண்டிருக்கிறது
காதல்....

****************************

எனக்கு
ஆயுசு
இரண்டு

எனக்கான என்
வாழ்க்கை
முடிந்து போனாலும்
உனக்கான
என் வாழ்க்கை
தொடரும்......


இப்படிக்கு
காதலிப்பவர்கள்
எல்லோரும்.
20 comments:

எவனோ ஒருவன் said...

தூரங்களில்
தொலைவதல்ல
தூரங்களை
தொலைப்பதுதான்
காதல்
என்றிருந்தேன்.

ஆனால்,
தூரங்களில்தான்
தொலைந்ததோ என்
காதல் என்ற
துக்கம் மட்டும்
தூங்கவில்லை இன்னும்.

இப்படிக்கு
காதலித்த ஒருவன்.

எவனோ ஒருவன் said...

//உன் புன்னகையில்
தொலைவது
வரம்...//
அருமை.

//எனக்கான என்
வாழ்க்கை
முடிந்து போனாலும்
உனக்கான
என் வாழ்க்கை
தொடரும்......//
இதுதான் ரொம்ப மயக்குது.

ரொம்ப நல்லா இருக்கு எல்லாம்.

S.A. நவாஸுதீன் said...

எல்லாமே நல்லா இருக்கு மயாதி

எனக்கான என்
வாழ்க்கை
முடிந்து போனாலும்
உனக்கான
என் வாழ்க்கை
தொடரும்......

இது டாப்

kartin said...

//புன்னகையை
தொலைப்பது
வதம்...

உன் புன்னகையில்
தொலைவது
வரம்//

வாங்க வாங்க!!

tamilcinema said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

துபாய் ராஜா said...

அனைத்தும் அருமை.

//உன் மௌனங்களில்
தற்கொலை செய்யும்
வார்த்தைகளை
காப்பாறிக்
கொள்வதற்காகவே
நான் கவிதை
எழுதக் கற்றுக்கொண்டேன்...//

அனைத்திலும் அருமை.

அன்புடன் அருணா said...

//புன்னகையை
தொலைப்பது
வதம்...

உன் புன்னகையில்
தொலைவது
வரம்...//
இதுக்காக பூங்கொத்து!

அபுஅஃப்ஸர் said...

நீண்ட நாட்கள் கழித்து

அருமையான ஒரு வரம்

யாழினி said...

மயாதி த‌ங்க‌ளுக்கு சுவராஷ்ய பதிவர் விருது கொடுத்துள்ளேன்

www.nilavil-oru-thesam.blogspot.com


ஏற்றுக்கொள்ள‌வும்.

பா.ராஜாராம் said...

நல்லா இருக்குங்க மயாதி.பிரியம் சொட்டும் வரிகள்.வாழ்த்துக்கள்!

யாழினி said...

//உன்னைப்
பத்திரப்படுத்துவதற்காகவே
பக்கத்தில்
வைத்திருக்க
ஆசைப்படுகிறேன்....

நீ உறங்கும்
பொழுதுகளில்
விழித்திருப்பேன்
உன்
உறக்கம் களையாமல்
பார்த்துக்கொள்வதற்காக...//அருமையான வரிகள் மயாதி!

sakthi said...

உன்னைப்
பத்திரப்படுத்துவதற்காகவே
பக்கத்தில்
வைத்திருக்க
ஆசைப்படுகிறேன்....

நீ உறங்கும்
பொழுதுகளில்
விழித்திருப்பேன்
உன்
உறக்கம் களையாமல்
பார்த்துக்கொள்வதற்காக...

மயாதி கலக்கல் வரிகள் காதலுடன் கூடிய வரிகள்

சுசி said...

//நீ
எங்கேயோ
இருந்தாலும்
இங்கேதான்
இருக்கிறாய்.....//

அருமை மயாதி..

ஜெஸ்வந்தி said...

//தூரங்களில்
தொலைவதல்ல
தூரங்களை
தொலைப்பதுதான்
காதல்//
நான் மிகவும் ரசித்த வரிகள் இவை.

சி.கருணாகரசு said...

மிக வலிமையான காதல் கவிதை. சிறப்பாக உள்ளது.

சந்தான சங்கர் said...

விழிகளை பார்த்து
இமைகள் சொன்னது....

"நான் என்றும் உன்னை அரவணைகின்றேன்
உன் பார்வை மட்டும் எங்கேயோ!"

விழிகள் சொன்னது...

என்னை பார்க்க செய்பவனும் நீதான்,
உறங்க செய்பவனும் நீதான்,
என் மீது தூசு படாமல் காப்பவனும் நீதான்,

உன் அன்பை எண்ணி
உனக்குள் உருளுவதும் உருகுவதும்
இந்த விழிகள் மட்டுமே.....

இமைகள் இமைக்க மறுத்தன....

சந்தான சங்கர் said...

விழிகளை பார்த்து
இமைகள் சொன்னது....

"நான் என்றும் உன்னை அரவணைகின்றேன்
உன் பார்வை மட்டும் எங்கேயோ!"

விழிகள் சொன்னது...

என்னை பார்க்க செய்பவனும் நீதான்,
உறங்க செய்பவனும் நீதான்,
என் மீது தூசு படாமல் காப்பவனும் நீதான்,

உன் அன்பை எண்ணி
உனக்குள் உருளுவதும் உருகுவதும்
இந்த விழிகள் மட்டுமே.....

இமைகள் இமைக்க மறுத்தன....

ரெட்மகி said...

எனக்கான என்
வாழ்க்கை
முடிந்து போனாலும்
உனக்கான
என் வாழ்க்கை
தொடரும்......

//

என்னமா பீல் பண்றீங்க தலைவா...

அத்தனையும் அத்தனை
அழகு..

நாதாரி said...

!!!!

கவிநயா said...

//உன் மௌனங்களில்
தற்கொலை செய்யும்
வார்த்தைகளை
காப்பாறிக்
கொள்வதற்காகவே
நான் கவிதை
எழுதக் கற்றுக்கொண்டேன்...//

//எனக்கான என்
வாழ்க்கை
முடிந்து போனாலும்
உனக்கான
என் வாழ்க்கை
தொடரும்......//

எழிலான கவிதைகள்!