இத்தளம் பிறந்தது- 03.05.2009(58 நாட்களின் முன்)
இதுதான் முதல் இடுகை...
புத்தாடை
பிச்சைக்காரனுக்கு
சந்தோசம் ...
கிடைத்துவிட்டது
யாரோ
கழட்டிப்போட்ட
கிழிந்த சட்டை...
*************************************************************************
எனக்கு முதல் பின்னூட்டம் கிடைத்தது இந்த இடுகைக்குத்தான், (இதுதான் முதன் முதல் திரட்டியில் பிரசுரமானது)
தாய்மை
ஒவ்வொரு
குழந்தையின்
முதல்
அழுகையும்
உணர்த்துகிறது
பிரசவம்
அல்ல !
பிரசுகம்
1 கருத்துக்கள்:
*************************************************************************************
Tuesday, June 2, 2009
கவிஞர்கள் வகை
மயாதி - புதிய பதிவர்ஆனால் பிரபல பதிவர்களின் கவிதை தொகுப்பை படித்த நிறைவை தருகின்றது இவரின் கவிதைகள் இவரின் சந்தோசமான இரங்கற்பா
மாயை போன்றவை அருமை!!!!!
நான் திரட்டிகளில் அறிமுகம் ஆகி ரெண்டு வாரம் கூட ஆகாதா போது, எனக்குக் கிடைத்த இந்த அறிமுகம் , ஒரு மாதத்திலேயே சராசரி ஹிட்ஸ் 300 எட்டிப் பிடிக்க உதவியது.
முகம் தெரியாத நண்பி ஷக்திக்கும் நன்றி...
இதே போல் என்னை எதோ ஒரு வகையில் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பட்டாம் பூச்சி பிடித்துத் தந்த நண்பி ஜெஸ்வந்திக்கும், முப்பத்திரெண்டு கேள்வித்தொடரில் மாட்டிவிட்ட நண்பி நாணலுக்கும் நன்றி.
( என்னடா எல்லாம் பொண்ணுங்களா இருக்கு என்று நீங்க பொறாமைப் பட்டால் நான் பொறுப்பல்ல)
***********************************************************************************
இதுவரை எனக்கு அதிக பின்னூட்டங்கள் வழங்கிஉள்ளவர் S.A. நவாஸுதீன் அண்ணா , அடுத்ததாக ஜமால் அண்ணா.
இவர்களுக்கும் நன்றி.
( தயவுசெய்து தொடர்ந்து நிறைய பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களே மன்னித்துக் கொள்ளுங்கள் ! எல்லோரின் பெயரையும் போட்டால் அதற்கு தனி இடுகை வேண்டுமே!)
பெயர் குறிப்பிடாத , தொடர்ந்து பின்னூட்டம் போடுபவர்களுக்கும்,மற்றும் அனானி நண்பர்களுக்கும், நன்றிகள்.
***********************************************************************************
எனக்கு அதிகம் பின்னூட்டம் வாங்கித் தந்த இடுகை இதுதான்...
வாழ்க்கை நிறையக் கவிதை
பொய்யாகத்தான்
சிரிக்கிறார்கள்
என்று
தெரிந்தும்
பதிலுக்கு
சிரித்து விட்டுத்தான்
போக
வேண்டியிருக்கிறது!
மேலதிகமாக
வேலை
செய்து வரும்
மேலதிக
சம்பளத்திற்கு
மேலதிகமாக
ஏதாவது
செலவு...
வந்துவிடுகிறது
ஒவ்வொரு மாதமும்!
மதுப்போத்தல்
வாங்கும் போது
அழுத்துக்கொல்வதை
விட....
அதிகமாக
அழுத்துக்கொல்கிறது
மனசு
பிள்ளைக்கு
பால் போத்தல்
வாங்கும் போது!
விலைவாசி
ஏறிவிட்டதே
என்று....
வாங்கிய
கடனைத்
திருப்பிக்கொடுக்கும்
போது
சந்தோசப்படுகிறது
மனசு...
இன்னுமொருமுறை
நம்பிக் கடன்
தருவார்
என்று...
மரண வீட்டில்
அறிமுகமானவர்களை
பார்த்து
வழமைபோல்
சிரிக்கலாமா
இல்லையா
என்று
இத்தனை
வயசாகியும்
தெரியவில்லை
எனககு
சிக்கெரெட்
வாசத்தை விட
அதை
மறைப்பதற்காக
பூசும்
வாசத்தை
வைத்தே
கண்டுபிடித்து
விடுகிறாள்
மனைவி
நான்
சிக்கெரெட்
பிடித்திருப்பதை ....
சிதறிக்கிடந்த
என்
அறையின்
பொருட்களை
ஒழுங்காக்கியபின்
தேடித்தான்
எடுக்க
வேண்டியிருக்கிறது
எனககு
தேவையான
போருட்களை....
நான்
சின்ன வயசில்
செய்ததாக
சொல்லும்
சாகசங்களை
மனைவி
பொய்
என்று
அறிந்து விட்டதால்
பிள்ளைகளிடமே
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
இன்னும்
கொஞ்ச நாளில்
பேரப்பிள்ளைகளிடம் தான்
சொல்லவேண்டியிருக்கும் .......
எல்லோருக்கும்
தெரிந்த
என்
முதல் காதலை
விட...
எனக்கு மட்டும்
தெரிந்த
முதல் காதலே
அதிகம்
சுவாரசியமாக
இருக்கிறது...
கையில்
கொஞ்சம்
அதிகமாக
பணம்
இருந்தாலே !
பக்கத்தில்
வருபவர்கள்
எல்லோரையும்
திருடனாகத்தான்
பார்க்கிறது
மனசு...
பழைய
காதலை
மறைப்பதற்காக
மனைவியை
அதிகம்
காதல்
செய்யவேண்டியிருக்கிறது
இப்போது ...
விடுமுறை
என்றாலே
வெளியேதான்
செல்லத் துடிக்கிறது
மனசு.....
வீட்டிலே
காத்துக்கிடக்கின்றன
நிறைய
வேலைகள்....
மயானத்தை
கடக்கும் போது
மட்டும்
வாழ்க்கையில்
அமைதி இல்லை
என்று
நினைக்க
தோன்றுவதில்லை
மனசுக்கு ...
வாசலில்
கொண்டுவந்து
தரும்
மரக்கறி
வியாபாரியிடம்
சண்டைபோட்டு
மிச்சம்
பிடிப்பதை விட
அதிகமாக
உபரிப்பணம் (Tips)
கொடுக்கிறாள்
மனைவி !
மேசை அருகே
பீசா
கொண்டுவருபவனுக்கு ...
39 பின்னூட்டம் வாங்கித் தந்த இந்த இடுகையே குங்குமத்தில் பிரசுரமாகி , வாசகர்களை தெரிவு சரியானதே என்று நிரூபித்தது.
(இதுவரை அந்தப் புத்தகம் எனக்குக் கிடைக்கவில்லை !
பிரசவமான பிள்ளையை பார்க்காமல் எத்தனையோ அப்பாக்கள் இருக்கும் என் நாட்டில், பிரசுரமான கவிதையைப் பார்க்காமல் இருப்பது ஒன்றும் பெரிய வேலையில்லை )
**********************************************************************************
நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு இடுகையை பதிவிட்டு சற்று நேரத்திலேயே நீக்கினேன். அந்த இடுகையை மீண்டும் இங்கே இடுகிறேன்! இது எந்தளவிற்கு ஒரு எழுத்தை பின்னூட்டம் வலுப்படுத்தும் என்பதைக் காட்டுவதற்காக.
அந்த பின்னூட்டம் ...
தமிழரசி said...
சூப்பர்.... - செருப்பு
இதை நீக்கிடுங்கள்..இந்த எண்ணம் உங்களுக்கு மட்டுமே தோன்றியது தான்...ஆனால் கண்டிப்பா பதிவர்கள் மனம் வருந்தும் நீங்கள் வளர்ந்து வரும் ஒர் நல்ல பதிவர்..இதை உங்கள் பால் அக்கறையில் மட்டும் சொல்கிறேன்....
நண்பர் வசந்த் இதே கோரிக்கையை மெயிலில் கேட்டிருந்தார் ....
( இந்த இடத்தில் ஒரு உதாரணத்திற்காக இந்த இடுகையை போடுவது யாரையும் காயப்படுத்தாது என்று நம்புகிறேன்)
சில பின்னூட்டங்களுக்கான உண்மையான அர்த்தங்கள் (சில).
(நகைச் சுவைக்காக மட்டுமே!)
கலக்குறிங்க - வயித்த கலக்கிறீங்கப்ப
முடியல... - அழுகைய அடக்க
ரிப்பீட்டே... - சனத்தொகை கூடிட்டு உங்க புண்ணியத்துல கொஞ்சம்
குறையட்டும்
மீ த ஃப்ர்ஸ்ட்.... - பெஸ்டா எஸ்கேப் ஆகிட்டமுல்ல
ரூம் போட்டு யோசிப்பீங்களோ..... - வெளியில இப்படி கேவலமா யோசிக்க
ஏலாது
பின்னிட்டீங்க...... - பன்னாட
ஹிஹிஹி..... - ஹிஹிஹி... இதெல்லாம் ஒரு ஆக்கம்
அவ்வ்வ்வ்வ் - வாந்தி வருது
போட்டு தாக்குறீங்க - போடாங்கோ
அசத்தல் - அலட்டல்
திரும்பவும் வருவமுல்ல - உன்னை கொலை செய்ய
ஒரு பொறுப்புள்ள அக்காவாக நடந்து கொண்ட அக்காவுக்கும் , வசந்துக்கும் நன்றிகள்.
*************************************************************************************
இதெல்லாம் உனக்குத் தேவையா என்பது போல வந்த சில பின்னூட்டத்தால் , வெட்கப்பட்டு நானே நீக்கிக் கொண்ட இடுகை இது.
ஒரு வரிக் கதை..
தலைப்பு - கைபேசி
கதை- இருந்தும் என்ன பயன் அவள் பேசாமல் .
தலைப்பு - நிஜம்
கதை - யாவும் கற்பனை சில கதைகளின் முடிவில்
தலைப்பு- மூன்று பொய்
கதை- நான் சொல்லுவதெல்லாம் உண்மை நீதிமன்றத்தில்
தலைப்பு-இரு சொல் கதை
கதை- கற்பனை செய்துகொள்
தலைப்பு - ஜனநாயகம்
கதை- எல்லோரும் பேசலாம் எழுதிக்கொடுபபத்தை மட்டும்
தலைப்பு- கலர் டீ வி
கதை - ஓட்டுக்கு லஞ்சம்
தலைப்பு- ஒருசொல் கதை
கதை- முற்றும்
*******************************************************************************
இது நான் என் வாழ் நாளில் எழுதிய முதல் கதைக்கான லிங்க்,
http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_21.html
(ஏதோ போட்டி நடக்குதாமே , அதற்காக எழுதினதுதான் , ஆனால் பரிசு சொக்கனுக்கு இல்லை )
இதற்கு கிடைத்த பின்னூட்டம் குறைவு என்பதால் கொஞ்சம் கவலைதான். நீங்கள் இப்போது கூட அந்தக் கதையை வாசித்து , ஏதோ கதை போலதான் இருக்கு? என்று ஒரு வார்த்தை சொன்னால், இது போல இன்னும் நிறைய எழுதி உங்கள் கழுத்தை அறுப்பேன்.
*******************************************************************************
பெயர் குறிப்பிடாத நண்பர்களிடம் மீண்டும் ஒருமுறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வெகு விரைவில்( சில மணி நேரம்) மீண்டும் சந்திக்கும் வரை
அன்புடன் மயாதி
உண்மை தான்