கருக்கட்டலின் போது
உயிர் தொடங்கும்
முதல்
அழுகையின் போது
சுவாசம் தொடங்கும்
காதலிக்கும்போதுதான்
வாழ்க்கை
தொடங்கும்...
மூச்சு
நின்று போவது
மட்டும்
மரணமல்ல
காதல்
நின்று போவதும்
மரணம்தான்
.................................................
கடவுளைக்
கண்டுபிடித்தான்
மனிதன்
மனிதனைக்
கண்டுபிடித்தது
காதல்
கடவுளுக்கும்
காதலுக்கும்
ஒரேயொரு
வித்தியாசம்தான்
கடவுள்
இருக்கிறாரா
இல்லையா என்று
தெரியாது
காதல்
கண்முன்னே
இருக்கிறது
...............................................
காதலுக்காக
அழுவதைப்போல
சந்தோசமான
செயல்
உலகத்தில்
இல்லை
நீ பக்கத்தில்
இருக்கும் போது
மௌனமாய்
இருக்கிறாய்
தூரத்தில்
இருக்கும்போது
கவிதையாய்
இருக்கிறாய்
உன்னை
ஒருமுறை
சிரிக்க
வைப்பதற்காக
நான்
எத்தனை முறை
அழுவதற்கும்
தயார்
உன்னை
ஒருமுறை
வாழ
வைப்பதற்காக
நான்
எத்தனை முறை
வேண்டுமானாலும்
செத்துப்பிழைக்கத்
தயார்
................................................
உன் கண்ணீர்த்
துளியைத்
துடைத்துவிட்ட
என் கையில்
கவிதை
பிசு பிசுத்தது
உன்
கை பிடித்துக்
கொண்டு
வீட்டுக்குப்
போகவேண்டும்
என்று நினைத்துதான்
நடந்தேன்
தெரியாத்தனமாய்
சொர்க்கத்துக்குப்
போய்விட்டேன்
காதலிப்பதைவிட
காதலிக்கப்படுவதிலேயே
அதிக சுகம்
அந்த சுகத்தையே
உனக்குத் தர
விரும்புகிறேன்
எல்லோரும்
கைபேசியில்
பேசுவார்கள்
நீ மட்டும்
கண் பேசியில்
பேசுகிறாய் ...
குழந்தைகள்
அம்மா அப்பா
விளையாட்டு
விளையாடுவதைப்போல
நாம்
காதலன் காதலி
விளையாட்டு
விளையாடவேணும்
என் நெஞ்சில்
சாய்ந்துகொண்டே
`என்ன உங்கள்
இதயம் துடிப்பது
கேட்கவில்லையே ?`
என்கிறாய்
அது எப்படித்
துடிக்கும் உனக்கு
வலிக்குமே !
நான் தேவதையோடு
வாழப்பிறந்தவன்
அதனால்
உன்னை விட
எந்தப் பெண்ணோடும்
என்னால்
வாழ்ந்துவிட முடியாது
என் ஆசை
எல்லாம் ஒன்றுதான்
தனக்கு
இப்படி ஒரு
கணவன்
கிடைக்கவில்லையே
என்று
எல்லாப்பெண்களும்
பொறாமைப்படும்
அளவுக்கு ஒரு
நல்ல கணவனாய்
உனக்கு நான்
இருக்கவேண்டும்
எதிர்பாராத
தருணத்தில்
நடக்கிற விபத்து
காதல்...
இரண்டிலும்
முடிவு
மரணமாகக் கூட
இருக்கலாம்
1 comment:
gud
Post a Comment