2.24.2011

வாழ்க்கை வழக்கு

தீர்ப்பு
வாசிக்கப்பட்டுவிட்டது...

சட்டபூர்வமாக
செயலிழக்கச்
செய்யப்பட்டது
திருமணம்

குழந்தைக்கும்
அவளுக்கும்
ஜீவனாபாயமும்
அறிவிக்கப்பட்டது

இனி அவள்
திருமதி என்று
போட்டுக்கொள்ள
முடியாது
ஆனால்
விட்டுப்போனவன்
குழந்தையின்
பெயரின் முன்னாலும்
அவன் பெயரை
நீக்கமுடியாதப்டி
விட்டுச் சென்றிருந்தான்...
ஆணாய்
இருப்பது எப்பவும்
மவுசுதான்

வழக்கு
முடிந்தபின்
அவனைக் கூட்டிச்
செல்ல
அவனது புது
மனைவி
வந்திருந்தாள்

அவளை அழைத்துச்
செல்ல
செல்லமா மாமி
மட்டுமே
வந்திருந்தாள்

செல்லமா மாமி
வேறுயாருமில்லை ...
சுமங்கலிகள்
நடத்திவைத்த
அவள் திருமணத்திற்கு
அனுமதிக்கப்படாத
விதவை...

5 comments:

சக்தி கல்வி மையம் said...

வித்தியாசமான சிந்தனை.. அருமை கவிதை அருமை...

சக்தி கல்வி மையம் said...

ஓட்டும் போட்டுட்டோமில்ல..

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html

எண்ணங்கள் 13189034291840215795 said...

நிதர்சனம். ஆனா மாறி வருது..

மயாதி said...

வேடந்தாங்கல் - கருன் said...
வித்தியாசமான சிந்தனை.. அருமை கவிதை அருமை...

//

நன்றிங்க

ரேவா said...

உங்கள் கவிதை இன்றைய சமூக முகங்களைத் தாங்கி நிற்கிறது.. என் வாழ்வில் நானும் என் தோழியரின் வாழ்க்கை வழக்கை சந்தித்து இருக்கிறேன்...
திருமதி சட்டத்தின் அனுமதியோடு
கழற்றப்பட்டு, அதே சட்டத்தால்
இன்னொரு வருக்கு சூட்டப்படும் வலி... கவிதை அருமை...உங்கள் "வாழ்க்கை வழக்கு" தலைப்பை நானும் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்......