3.17.2011

நினைவே கவிதையாய்

நிறையப் பெண்கள்
பார்ப்பதற்கு வேண்டுமானால்
அழகாய் இருக்கலாம்
நீ மட்டும்தான்
நினைப்பதற்கே
அழகாய் இருக்கிறாய்


நினைப்பதும் ஒரு
பசிதான்
என்ன எவ்வளவு
நினைத்தாலும்
அது அடங்குவதில்லை

சாமியை நினைத்தால்
தியானம்
உன்னை நினைத்தால்
ஞானம்

காதலிப்பதைப் போல
இலகுவான வேலை
இல்லை
காதலிக்க வைப்பதைப்போல
கடினமான
வேலையும் இல்லை


எனக்கு வாழ்வதில்
எந்தக் கஷ்டமும்
இல்லை
உன்னை நினைத்தாலே
போதும்
அதேபோல்
சாவதிலும் எந்த
கஷ்டமும் இல்லை
உன்னை
மறந்தாலே போதும்


நான் எப்போதும்
தற்கொலை
செய்ய நினைத்ததே
இல்லை -உன்னை
எனக்குக்
காட்டிய
இந்த வாழ்க்கையை
எப்படி என்னால்
கொலை செய்ய
முடியும் ...

8 comments:

சமுத்ரா said...

//நிறையப் பெண்கள்
பார்ப்பதற்கு வேண்டுமானால்
அழகாய் இருக்கலாம்
நீ மட்டும்தான்
நினைப்பதற்கே
அழகாய் இருக்கிறாய்//

அருமையான வரிகள்..

ரேவா said...

நான் எப்போதும் தற்கொலை செய்ய நினைத்ததே இல்லை -உன்னை எனக்குக் காட்டிய இந்த வாழ்க்கையை எப்படி என்னால் கொலை செய்ய முடியும் ...

நினைவே கவிதையாய்... அருமை... என் நண்பன் வாயிலாக உங்கள் வலைத்தளம்
வந்தேன்..முகப்பே அழகு..
கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்... உங்களையும் கொஞ்சட்டும்...

சூப்பர் பாராட்ட வார்த்தைகள் இல்லை என்னிடம்--

மயாதி said...

சமுத்ரா said...
//நிறையப் பெண்கள்
பார்ப்பதற்கு வேண்டுமானால்
அழகாய் இருக்கலாம்
நீ மட்டும்தான்
நினைப்பதற்கே
அழகாய் இருக்கிறாய்//

அருமையான வரிகள்..

//

நன்றி சமுத்ரா

மயாதி said...

ரேவா said...
நான் எப்போதும் தற்கொலை செய்ய நினைத்ததே இல்லை -உன்னை எனக்குக் காட்டிய இந்த வாழ்க்கையை எப்படி என்னால் கொலை செய்ய முடியும் ...

நினைவே கவிதையாய்... அருமை... என் நண்பன் வாயிலாக உங்கள் வலைத்தளம்
வந்தேன்..முகப்பே அழகு..
கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்... உங்களையும் கொஞ்சட்டும்...

சூப்பர் பாராட்ட வார்த்தைகள் இல்லை என்னிடம்//நன்றி ரேவதி

siva said...

/நிறையப் பெண்கள்
பார்ப்பதற்கு வேண்டுமானால்
அழகாய் இருக்கலாம்
நீ மட்டும்தான்
நினைப்பதற்கே
அழகாய் இருக்கிறாய்//

அருமையான வரிகள்.:repeat...
நல்ல இருக்கு நண்பா

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நினைப்பதும் ஒரு
பசிதான் ...
நன்றாக இருக்கிறது

ANU said...

EN KATHALUKU ENNAI PIDIGAVILLAI ANAL ENAKU PIDIKUM 1 VARUDAM AVANUM ENNAI VIRUMBINAN ANAL IPPO ENAKU PIDIKKAVILLAI YEN ENRU THERIYAVILLAI

Lali said...

பனிக்கட்டிகள் திடீரென்று மேலே வீசப்பட்டதை போல ஒரு உணர்வு..
காதலாகிய கவிதைகள்.. :)