2.23.2011

காதல் பா

கடவுள்
இல்லையென்பவன்
நாத்திகனாகலாம்
காதல்
இல்லையென்பவன்
மனிதனாகவே
முடியாது

கடவுளால்
வரம் மட்டுமே
தர முடியும்
காதலால்தான்
வாழ்க்கையையே
தர முடியும்

கடவுள்
இல்லாமல்
வாழ்ந்துகூட
விடலாம்
காதல் இல்லாமல்
செத்துவிடக் கூட
முடியாது

கடவுள்
மதங்களால்
பிரிக்கிறார்
காதல்
மனங்களால்
இணைக்கிறது

கடவுள்கள்
நிறையப் பேர்
இருக்கிறார்கள்
காதல்
ஒன்றுதான்

பேசாமல்
காதலையே
கடவுளாக்கி
விடலாமோ
என்றுகூடத்
தோன்றுகிறது...

13 comments:

sulthanonline said...

கவிதை அருமை நீண்ட நாள் கழித்து பதிவிட்டுள்ளீர்கள் பதிவு சூப்பர்

வேடந்தாங்கல் - கருன் said...

எளிமையான தமிழில் அழகான கவிதை.. அருமை...

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_23.html

ப்ரியமுடன் வசந்த் said...

காதல் பா

சூப்பர் பா

________

காதலை அதகளம் பண்ணிருக்க மாப்ள!!!

வேடந்தாங்கல் - கருன் said...

follower ஆகிவிட்டேன் vote - ம் போட்டுட்டேன்...

சமுத்ரா said...

கவிதை அருமை

மயாதி said...

sulthanonline said...
கவிதை அருமை நீண்ட நாள் கழித்து பதிவிட்டுள்ளீர்கள் பதிவு சூப்பர்

//

நன்றிங்க நண்பரே

மயாதி said...

வேடந்தாங்கல் - கருன் said...
எளிமையான தமிழில் அழகான கவிதை.. அருமை...

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_23.ஹ்த்ம்ல்/நன்றி நண்பரே

மயாதி said...

ப்ரியமுடன் வசந்த் said...
காதல் பா

சூப்பர் பா

________

காதலை அதகளம் பண்ணிருக்க மாப்ள!!!

//

நன்றி மாப்ள

மயாதி said...

சமுத்ரா said...
கவிதை அருமை

//

நன்றி

தமிழரசி said...

அட இன்னைக்கு காதலுக்கு பலி கடவுளா?

//கடவுள் மதங்களால் பிரிக்கிறார் //

எந்த கடவுள் பிரித்தார் பிரியச் சொன்னார்..

மயாதி said...

அக்கா ! கவிதை வாசித்தா அனுபவிக்கனும் இப்படி ஆராயக் கூடாது

சி.கருணாகரசு said...

புதிய கோணத்தில் கவிதை நச்சின்னு இருக்குங்க பாராட்டுக்கள்.

மயாதி said...

சி.கருணாகரசு said...
புதிய கோணத்தில் கவிதை நச்சின்னு இருக்குங்க பாராட்டுக்கள்.

//

நன்றி நண்பா