பீச்
பூங்கா என்று
அலையாமல்
காதலர்
தினத்தைக்
கொண்டாட
கோயிலுக்குப்
போனோம்
விலையுயர்ந்த
ஐஸ் கிரீமோ
சிக்கன் 65 வோ
இல்லை ..
எனக்கு நீயும்
உனக்கு நானும்
இட்டுக்கொண்ட
திருநீறும்
சந்தனப்பொட்டும்
காதலை
பரிமாற வைத்தன
மற்ற
திருவிழாக்களைப்
போலல்ல
கோயிலில்
கூட்டம்
குறைவாகத்தான்
இருந்தது
காதலர்
தினத்தன்று
***********************
கூடப்படிக்கும்
பொண்ணு போடும்
வளையல்
பக்கத்துவீட்டுப்
பொண்ணு
கட்டும் சேலை
இப்படி இன்னும்
பல ..
என்று உன்
விருப்பப் பட்டியல்
தெரிந்திருந்தும்..
வாங்கித்தர
வசதியில்லாமல்....
நிலவைப்
பிடித்துத்
தருவேன்...
நட்ஷத்திரத்தை
பரிசளிப்பேன்
என்று
கவிதை எழுதி
சமாளிக்கும்
போது...
நீ சந்தோசப்
படுகிறாயா
அல்லது
நான்
கவலைப்படக்
கூடாது
என்பதற்காக
சந்தோசப்படுவதாய்
நடிக்கிறாயா?
3 comments:
நீங்க இன்னும் நல்லா எழுதுவீங்களே மாயாதி!
nalla kavithai. kaathal enbathe vaarththai vilaiyaattaal pirappathu thane. kaathalar thinaththil kovil kuttamillathathu varuththam thaa.
அன்புடன் அருணா said...
நீங்க இன்னும் நல்லா எழுதுவீங்களே மாயாதி!//
புரியுது என்ன சொல்ல வாறீங்க என்று.
நன்றி அருணா அக்கா .
Post a Comment