7.02.2009

காதலாகிப் பேசுகிறேன்..



நீ

கவலைப்படுகிறாய்!
இப்போது பார்
கவலைகளுக்கும்
கவலை
பிடித்துவிட்டது...


சேமித்து
வைத்த
என் சின்ன
சின்ன
கவிதைகள் கூட
என்னைப்
பார்த்துச்
சிரிக்கின்றன...
உனக்குப்
பிடிக்காதவை
எல்லாம்
எப்படிக்
காவிதையாகும்
என்று...


உனக்கு
பிடிக்கும்
என்பதால்
எனக்குப்
பிடித்தது
ஏராளம்..
உனக்குப்
பிடிக்காது
என்பதால்
எனக்குப்
பிடிக்காததும்
ஏராளாம்
என்னையும்
சேர்த்து..


ஒற்றை
உரசலில்தான்
பற்றிக் கொள்கிறது
காதலும்
தீக்குச்சியும்
எல்லோரையும்
இறுதியில்
சாம்பலாக்கிவிட ...


10 comments:

Anonymous said...

இப்போதாங்க முதல் முறையா வாறேன்...

தமிழ் மணம் பார்த்தேன் முகப்பில்

\\ஒற்றை
உரசலில்தான்
பற்றிக் கொள்கிறது
காதலும்
தீக்குச்சியும்
\\

நல்லாயிருக்குங்க

\\எல்லோரையும்
இறுதியில்
சாம்பலாக்கிவிட ...
\\

அடுத்தவருக்கு வாழ்வு தந்துவிட்டு தானே ...

நட்புடன் ஜமால் said...

நீ
கவலைப்படுகிறாய்!
இப்போது பார்
கவலைகளுக்கும்
கவலை
பிடித்துவிட்டது...\\

அருமை மயாதி ...

Anonymous said...

கவிதை ஊற்றடா நீ...
காதல் சுரங்கமடா..

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒற்றை
உரசலில்தான்
பற்றிக் கொள்கிறது
காதலும்
தீக்குச்சியும்
எல்லோரையும்
இறுதியில்
சாம்பலாக்கிவிட ...//

டச்சிங்.......

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//உனக்குப்
பிடிக்காது
என்பதால்
எனக்குப்
பிடிக்காததும்
ஏராளாம்
என்னையும்
சேர்த்து..//
இதுக்குப் பெயர் ஒருதலைக் காதல் அல்லவா!

சுசி said...

//உனக்கு
பிடிக்கும்
என்பதால்
எனக்குப்
பிடித்தது
ஏராளம்..//

காதலி மனைவியான பின் இந்த எண்ணம் மாறாம பாத்துக்குங்க பாய்ஸ்....
நல்ல கவிதை மயாதி.

sakthi said...

ஒற்றை
உரசலில்தான்
பற்றிக் கொள்கிறது
காதலும்
தீக்குச்சியும்
எல்லோரையும்
இறுதியில்
சாம்பலாக்கிவிட ..

wonderful..............

யாழினி said...

//உனக்கு
பிடிக்கும்
என்பதால்
எனக்குப்
பிடித்தது
ஏராளம்..
உனக்குப்
பிடிக்காது
என்பதால்
எனக்குப்
பிடிக்காததும்
ஏராளாம்
என்னையும்
சேர்த்து..
//

கவலைப் படாதீங்க இன்னும் கொஞ்ச நாள்ல அவங்களுக்கு உங்கள பிடிச்சிடும்.

கவிதை அழகு

தினேஷ் said...

நிறைய எழுதுங்கள்... வாழ்த்துக்கள்

தினேஷ்

ரெட்மகி said...

அண்ணே ,
உங்கள் கவிதையை தினம் படிக்க படிக்க...
நான் கவிதை எழுதுவதை விட்டு விடலாம் என்று இருக்கிறேன்...

//////////////////////////////////////////////////////
நீங்கள் ஒரு குட்டி தபு சங்கர்...
//////////////////////////////////////////////////////