7.03.2009

நான் ரசித்த வேறு ஒருவரின் கவிதையும் , எனது கவிதை ஒன்றும்...



அ(ணை)னைப்பு …


கற்புக்கு பெயர் போன
கண்ணகியின் சிலைக்குப் பின்
காதலர்களின் சில்மிஷம்
திருமணத்திற்கு முன்பே…

காதல் தீ
பற்றிக் கொள்ள
அணைக்கின்றது
காதலர் ஜோடி
கண்ணகியின்
கோபத்திற்கு ஆள்பட்டு
சென்னை எரிந்தால்
அணைப்பது யாரோ ?

அதனால் தான்…
மதுரையை எரித்த
கண்ணகியின் சிலை
கடற்கரைக்கு அருகில்
சென்னையில்…
அ(ணை)னைக்க
வசதியாக இருப்பதால்…

http://englishkaran.blogspot.com/ என்ற தளத்தில், இங்கிலீஷ்காரன் என்ற நண்பர் எழுதிய இந்தக் கவிதை எனக்குப் பிடித்துப் போய் விட்டது. அதைப் போல இல்லாவிட்டாலும் , ஏனோ தெரியாது , என்றோ நான் எழுதிய இந்தக் கிறுக்கலும் சும்மா ஞாபகம் வந்தது....

இன்று

பஸ்ஸின்
பின்னிருக்கை
தியேட்டரின்
ஒதுக்கிருக்கை
கடற்கரையோர
கல்லிருக்கை
எல்லாவற்றிலும்
அசிங்கப்பட்டுப்
போய்க்
கிடக்கிறது..
காதல்
வா
இருவரும்
சேர்ந்து...
புனிதமாக்குவோம்!


13 comments:

Anonymous said...

ரசித்தமைக்கும்,சுட்டி இட்டமைக்கும் நன்றி...

Anonymous said...

பஸ்ஸின்
பின்னிருக்கை
தியேட்டரின்
ஒதுக்கிருக்கை
கடற்கரையோர
கல்லிருக்கை//

இவை மட்டும் அல்ல கல்லறைத் தோட்டங்களும் கூட அசிங்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.ஆன்மாக்கள் அவதிப் படுகின்றன.

sakthi said...

பஸ்ஸின்
பின்னிருக்கை
தியேட்டரின்
ஒதுக்கிருக்கை
கடற்கரையோர
கல்லிருக்கை
எல்லாவற்றிலும்
அசிங்கப்பட்டுப்
போய்க்
கிடக்கிறது..
காதல்
வா
இருவரும்
சேர்ந்து...
புனிதமாக்குவோம்!

அது சரி...

sakthi said...

காதல் தீ
பற்றிக் கொள்ள
அணைக்கின்றது
காதலர் ஜோடி
கண்ணகியின்
கோபத்திற்கு ஆள்பட்டு
சென்னை எரிந்தால்
அணைப்பது யாரோ ?


நச்

ரெட்மகி said...

அருமை நண்பா ....

அப்பழுகற்ற காதல்

Anonymous said...

இங்கு நடப்பதற்க்கு பெயர் காதல் அல்ல....

ஆ.சுதா said...

மாயாதி உங்களுக்கு கவிதை சரலமாக வருகின்றது. இன்னும் கொஞ்சம் முயற்சிக்கலாமே. வரிகளை கனப்படுத்தி
இன்னும் திறமையான கவிகளை தாருங்கள் இது என் விருப்பம் ஒன்றே!!

மயாதி said...

நன்றி
இங்கிலீஷ்காரன்

மயாதி said...

நன்றி..

ரெட்மகி
தமிழரசி
sakthi

மயாதி said...

ஆ.முத்துராமலிங்கம் said...

மாயாதி உங்களுக்கு கவிதை சரலமாக வருகின்றது. இன்னும் கொஞ்சம் முயற்சிக்கலாமே. வரிகளை கனப்படுத்தி
இன்னும் திறமையான கவிகளை தாருங்கள் இது என் விருப்பம் ஒன்றே!!//

உங்கள் கருத்துக்கு நன்றி முத்து...
நிச்சயமாக முயற்சிக்கிறேன். ..

ஆக்கபூர்வமான , கருத்துகளை கவிதையாக்கியது குறைவுதான்.
மற்றும் கவிதைக்குரிய பண்புகளை கவனிப்பதும் குறைவுதான், ஒத்துக் கொள்கிறேன்.

Prapa said...

சே இவ்வளவு நாளும் என் கண்களில் படவில்லையே உங்கள் பதிவு. அருமை.

S.A. நவாஸுதீன் said...

கவிதை நல்லா இருக்கு மயாதி.

தினேஷ் said...

நல்லாயிருக்கு...


தினேஷ்