2.23.2011

கொஞ்சமாவது பேசிவிடு ...


நான்
இறந்தபின்பு
மற்றவர்களைப்போல
நீயும்
மௌன அஞ்சலி
செய்துவிடாதே
என் மரணத்திற்கு
காரணமே
உன் மௌனம்தானே

உன் பெயருக்கு
அர்ச்சனை
போட்டேன்
நீ அர்ச்சிக்கப்
பட்டாயோ
இல்லையோ
சாமி அர்ச்சிக்கப்பட்டது

எல்லோருக்கும்
வீடு
முகவரியாக
இருக்கும்
உன் வீட்டுக்கு
மட்டும்
நீ
முகவரியாய்
இருக்கிறாய்


உனக்கு
குழந்தை மனசு
என்று
அடிக்கடி உன்
அப்பா சொல்கிறார்
எனக்கு
குழந்தைகள் மீது
கொள்ளைப் பிரியம்
என்பது
தெரியாமல்

அம்மா அப்பா
இல்லாதவர்கள்
மட்டும்
அனாதையில்லை
நீ இல்லாத
நானும்
அனாதைதான்

பேசு என்றேன்
என்ன பேச
என்றாய்
ஏதாவது பேசு
என்றேன்
நீங்களே
சொல்லுங்கள்
என்றாய்
அதுதானே சொல்கிறேன்
என்றேன்...
இப்படியே நீண்ட
நேரம்பேசிக்
கொண்டிருந்தோம்
எதுவுமே பேசாமல்
அர்த்தங்களைச்சொல்ல
வார்த்தைகள் மட்டும்
போதுவதில்லை...


என்ன வேண்டும்
என்றேன்
எதுவுமே வேண்டாம்
நீங்கள்
மட்டும் போதும்
என்றாய்
என்னைத்தர
முடியாது
என்றேன்
கோபித்துக்கொண்டாய் ..
என்னைத் தந்து
உனக்கு சுமையாகக
முடியாதுஉன்னைத்
தந்துவிடு
எனக்குள்
வைத்துக்கொள்கிறேன்


சின்னச் சின்ன
விடயத்திற்காகவெல்லாம்
கோபித்துக் கொள்கிறாய்
நீ கோபித்துக்
கொள்வதால்
சின்ன சின்ன
விடயங்கள் கூட
பெரிதாகிப்
போகின்றன ....


உன்னோடு
சேர்ந்து
வாழா விட்டாலும்
பரவாயில்லை
சேர்ந்து சாக
மட்டும் முடியாது
உனக்கு முன்னமே
செத்துவிட
வேண்டும்

8 comments:

Anonymous said...

soooppar

சக்தி கல்வி மையம் said...

காதல் மணம் கவிதை.. அருமை..

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_24.html

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Super.

மயாதி said...

வேடந்தாங்கல் - கருன் said...
காதல் மணம் கவிதை.. அருமை..
//

thanks

மயாதி said...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...
Super.
//

thanks akka

மணி said...

நண்பா அருமையா பிரிவுத்துயர்

ப்ரியமுடன் வசந்த் said...

என்ன மாப்ள படிப்பெல்லாம் முடிஞ்சுடுச்சா? எப்போ ஃபைனல் எக்ஸாம்?

மயாதி said...

ப்ரியமுடன் வசந்த் said...
என்ன மாப்ள படிப்பெல்லாம் முடிஞ்சுடுச்சா? எப்போ ஃபைனல் எக்ஸாம்//



அடப் பாவி நான் படிப்பை முடிச்சு ரெண்டு வருஷம் ஆகிட்டு .