8.10.2010

சும்மா !!!!!!

காற்றடிக்கும்
போதெல்லாம்
ஆடிக்கொண்டிருந்தது
நிலவு
தண்ணியில் ....

காற்று
இல்லாமலேயே
ஆடிக்கொண்டிருந்தது
நிலவு
அவன்
தண்ணியில்...

..........................................................

வேலைக்குப்
போகும் அவசரத்தில்
கிளம்பவேண்டியிருக்கிறது
வீட்டில்
நிறைய வேலைகளை
விட்டுவிட்டு....


...............................................................

அவளும்
நண்பர்கள் என்று
நிறையப் பேரை
அறிமுகப்படுத்திவிட்டாள்

நானும் நண்பிகள்
என்று
நிறையப்பேரை
அறிமுகப்படுத்தி விட்டேன் !

அவர்களில்
ஒருவனையேனும்
காதலித்திருக்கமாட்டாலோ
என்று நான்
நினைத்ததைப்போல

இவள்களில்
ஒருத்தியையேனும்
காதலித்திருக்கமாட்டாரோ
என்று
அவளும்
ஒருவேளை
நினைத்திருப்பாளோ.....!

.............................................................


கவிதை
எழுதத் தெரிந்தவன்
கவிதையெழுதி
தப்பித்துக்கொள்கிறான்
தெரியாதவன்
காதலித்து
மாட்டிக்கொள்கிறான்....

9 comments:

ஜெஸ்வந்தி said...

கவிதைகள் அசத்தல்.

//கவிதை
எழுதத் தெரிந்தவன்
கவிதையெழுதி
தப்பித்துக்கொள்கிறான்
தெரியாதவன்
காதலித்து
மாட்டிக்கொள்கிறான்.//

இது உண்மைதானா மயாதி .?.

மயாதி said...

ஜெஸ்வந்தி said...
கவிதைகள் அசத்தல்.//

thanks akka!

//கவிதை
எழுதத் தெரிந்தவன்
கவிதையெழுதி
தப்பித்துக்கொள்கிறான்
தெரியாதவன்
காதலித்து
மாட்டிக்கொள்கிறான்.//

இது உண்மைதானா மயாதி .?.//

y not?

தமிழரசி said...

கடைசி இரண்டு கவிதைகள் சுவை.... நலமா தம்பி?

மயாதி said...

தமிழரசி said...
கடைசி இரண்டு கவிதைகள் சுவை.... நலமா தம்பி//

im ok ! thanks akka

கமலேஷ் said...

எல்லாமே ரொம்ப எதார்த்தமா இருக்கு...

//கவிதை
எழுதத் தெரிந்தவன்
கவிதையெழுதி
தப்பித்துக்கொள்கிறான்
தெரியாதவன்
காதலித்து
மாட்டிக்கொள்கிறான்.//

எனகென்னவோ அப்படி தோணலை...

திகழ் said...

##கவிதை
எழுதத் தெரிந்தவன்
கவிதையெழுதி
தப்பித்துக்கொள்கிறான்
தெரியாதவன்
காதலித்து
மாட்டிக்கொள்கிறான்###

அருமை

நலமா நண்பரே

மயாதி said...

கமலேஷ் said...
எல்லாமே ரொம்ப எதார்த்தமா இருக்கு...

//கவிதை
எழுதத் தெரிந்தவன்
கவிதையெழுதி
தப்பித்துக்கொள்கிறான்
தெரியாதவன்
காதலித்து
மாட்டிக்கொள்கிறான்.//

எனகென்னவோ அப்படி தோணலை...//நன்றி கமலேஷ் !

நீங்கள் மாட்டிக்கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன் ..லொள்ளு !

மயாதி said...

திகழ் said...
##கவிதை
எழுதத் தெரிந்தவன்
கவிதையெழுதி
தப்பித்துக்கொள்கிறான்
தெரியாதவன்
காதலித்து
மாட்டிக்கொள்கிறான்###

அருமை

நலமா நண்பரே//நன்றி..

நலமா இருக்கேன் திகழ்.நீங்கள் எப்படி ?

சமுத்ரா said...

good...