3.14.2010

இருநூறாவது பதிவு (special பதிவு அல்ல )

கடவுளை வாழ விடுங்கள்..
மனிதனைக்
கடவுளாக்குவோம்
அந்த
கடவுளையே
கல்லால்
அடிப்போம்
அந்தக்
கல்லையே
மீண்டும்
கடவுளாக்குவோம்...

பாவம்
கடவுள்
மட்டும்
இன்னும்
கவனிக்கப்படாமல்
அப்படியே
இருக்கிறார்...



அப்பா
தப்புச் செய்வதும்
மகன்
தப்புச் செய்வதும்
எல்லா
இனத்திலேயும்
நடக்கும்
கடவுளே
தப்புச் செய்வது
நம் இனத்திலேதான்
நடக்கும்....
நம் இனத்திலேதானே
நிறையக்
கடவுள்கள்
பிறந்திருக்கிறார்கள் ....

மஜிக்
செய்பவர்களே
மறந்தும்
வாயால் திருநீறு
கக்குவது
போலவும்...
மூக்கால்
சிவலிங்கம்
எடுப்பது
போலவும்
வித்தை
செய்து விடாதீர்கள்

உங்களையும்
கடவுளாக்கி
விடுவார்கள்
இந்த
மனிதர்கள்
பிறகு
உங்கள்
நீலப் படத்தையே
குடும்பமாக
இருந்து
பார்த்து ரசிப்பார்கள்
அதை
போட்டு
கிட்ஸ் எடுக்கவே
காத்து கிடக்கிறது
ஒரு கூட்டம்

எதை
எடுத்தாலும்
போலி
செய்தோம்
கடைசியில்
கடவுளிலும்
போலி
செய்கிறோம்...

மனிதர்களே
முடிந்தால்
உங்கள்
பகுத்தறிவை
தொலைத்துவிடுங்கள்
கடவுள்
இல்லாத
மிருகமாகிப்
போவீர்கள்...
அந்தக்
கடவுளாவது
கலப்படம்
இல்லாமல்
நிம்மதியாக
இருக்கட்டும்...


பின்னூட்ட போதை

நான்
என்பது
மாயை
பின்னூட்டம்
என்பது
போதை...

சில
பாலின் போதை
சில
கள்ளின் போதை

இந்த
போதைக்கு
மயங்கியே
கிடக்கிறது
பிளாக்கர்
உலகம்


பாசம்
குடித்து
பாலைக்
கொடுக்கும்
ஒரு கூட்டம்

போதை
கொடுத்து
போதை
வாங்க
நினைக்கும்
கள்ளு குடிக்கும்
கூட்டம்...
கூடவே
வாக்கும் போட்டு
கள்ள
அரசியல்
நடத்தும்
இந்தக்
கூட்டம் ...

நானும்
கிடந்தேன்
ஒரு நாள்
மயங்கி...
வாந்தி
வரவே
எழுந்து
விட்டேன்
போதை
தெளிந்து...

இப்போது
நான்
பால் மட்டும்
குடிப்பதால்
கிட்ட வர
மறந்தது ...
கள்ளுக் குடிக்கும்
கூட்டம்
நன்றி
நல்லவனாய்
வாழவிட்டதற்கு...

இப்போதும்
பின்னூட்டம்
போடும்
நண்பர்களுக்கும்
நன்றி!

பாலூற்றி
இத்தளத்தை
வாழ வைப்பதால்...

இன்றைய காதல் கவிதை

உயிரோடுதானே
இருக்கிறேன்
எதற்கு இந்த
மௌன அஞ்சலி ....



என்
கவலையெல்லாம்...
உன் மௌனம்
எனக்கே
இவ்வளவு
வலியைக்
கொடுக்கிறதென்றால்
அதைத் தாங்கும்
உனக்கு
எவ்வளவு
வலியைக்
கொடுக்கும்
என்பதுதான்....






ஒரு பேய்க் கவிதை

காதலித்துச்
செத்தவர்களை
எரித்துவிடாதீர்கள்
உள்ளே
இன்னொரு
ஜீவன்
இன்னும்
உயிரோடு
இருக்கலாம்..



ஒரு சின்ன யதார்த்தம்

குடி போதையில்
வருபவன்
மோதி விடுவானே
என்று
வாசல் கதவை
திறந்து
வைத்தே
காத்திருந்தால்...
வந்தவன்
கேட்டான்
எவன் வருவான்
என்று
கதவைத்
திறந்து
வைத்திருக்காயடி??????


சும்மா ஜாலிக்காக

காதலித்தால்
கவிதை
வரும் என்கிறார்களே
உண்மையா???

காதலித்தவர்!

அடப் போப்பா
அப்படித்தான்
நானும்
நினைச்சேன்..
இப்போ
அவளைப்
பார்த்தால்
வார்த்தையே
வர மாட்டேன்
என்கிறது
இதில
கவிதை
வேறையா???




6 comments:

அன்புடன் அருணா said...

இப்போ பின்னூட்டம் போடவா?வேண்டாமா????

அப்துல்மாலிக் said...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

கவிதை சொல்லும் தளம் இது

தொடருங்கள்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அடடே 200 ஆகி விட்டதா? எங்கள் பொறுமை மெச்சப் படவேண்டியது தான்.
அந்தப் பேய்க் கவிதை சூப்பர்.
சின்ன அட்வைஸ். layout நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் கமெண்ட்ஸ் வாசிக்க முடியாத படி colour combination இருக்கிறது. text colour light ஆக்கப் படவேண்டும். கொஞ்சம்கவனிக்கவும்.

Anonymous said...

ப்ளாக் பற்றிய உங்களது வரிகள் அருமை
நிறைய நபர்களை கண்டிப்பாக யோசிக்க வைக்கும்.
வாழ்த்துக்கள்.

Abbas said...

//அன்புடன் அருணா said...
இப்போ பின்னூட்டம் போடவா?வேண்டாமா??//

அதானே!?

Thadsha said...

pai kavitahai super.
"kadavul irukirara" yathartham.
keep it up.