10.01.2011

வாழ்க்கை நிறையக் கவிதை

அழாமல்
கவலைகளைக்
கொண்டாட
கவிதைகள்
கைகொடுக்கின்றன

கன்னத்
தை வருடும்
கண்ணீர்த்துளியை விட
தனிமையில்
நல்ல
நண்பன் இல்லை

கவலைகளை
ரசிக்கப்பழகாவிட்டால்
வாழ்க்கையின்
பெரும்பகுதி
ரசிப்பதற்குஎதுவும்
இல்லாமலேயே
கழிந்து விடும்

என் ஒவ்வொரு
கவலையிலும்
ஒளிந்திருக்கும்
நான்
தொலைத்த
சந்தோசத்தைக்
கண்டு பிடித்தே
என்
கவலைகளைப்
போக்கிக் கொள்கிறேன்

3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவலைகளை ரசிக்க கற்றுக் கொ்ணடுவிட்டால் வாழ்க்கை வசந்தம்தான்...

அழகிய கவிதை ரசித்தேன்...

மயாதி said...

thanks

தமிழரசி said...

//கவலைகளை
ரசிக்கப்பழகாவிட்டால்
வாழ்க்கையின்
பெரும்பகுதி
ரசிப்பதற்குஎதுவும்
இல்லாமலேயே
கழிந்து விடும்//

எதார்த்தம் மயாதி..ரசிக்க பழகிட்டால் போதும்..