7.16.2011

ஒரு அவதாரத்தின் கதை ....



என் அம்மாவுக்கான என் சமர்ப்பணம் ....





அம்மா நீ
இறக்கவில்லை
ஒரு அவதாரம்
தன் கடமையைச்
செய்துவிட்டுப்
போய்விட்டாய்
அவ்வளவுதான் ...


உனக்காக - ஒரு
நாள்கூட
வாழாமல்
ஒவ்வொரு நாளையும்
எங்களுக்காக
வாழ்ந்தாயே
உனக்காக உன்னை
வாழவைக்க
நினைத்தபோது
வேண்டாம் என்று
போனாயே ....

உன்னை
உருக்கித்தானே
எங்களை
உருவாக்கினாய்....

நீ
தாய்ப்பால் தந்தது
கொஞ்சம்தான்
ஆனால்
அளவுக்கதிகமாகவே
அறிவுப்பாலையும்
துணிவுப்பாலையும்
தந்துவிட்டுப்
போய்விட்டாய் ...


ஒரு கிராமத்தின்
மூலையில் இருந்து
உலகளவு
உன்னால் சிந்திக்க
முடிந்தது...
ஒழுக்கமாகவும்
சிந்திக்கமுடிந்தது
அதனால்தான்
எங்களால்
இந்தளவு உயரவும்
முடிந்தது
ஒழக்கமாக இருக்கவும்
முடிந்தது...

பாரதியின்
கனவில்தான்
புதுமைப்பெண்
இருந்தாள்
எல்லோரின்
கண்முன்னே
புதுமைப்பெண்ணாய்
நீ வாழ்ந்துகாட்டினாய்....

உன்னைப்போல
ஒரு அம்மா
கிடைத்தால்
இந்த உலகத்தில்
எல்லாக்
குழந்தையும்
நல்ல குழந்தையே ...


உலகத்தின்
அம்மாக்களுக்கெல்லாம்
நீ
முன்னுதாரணம் ...

தன்னம்பிக்கையில்
நீ
தனித்துவம்

ஒழுக்கத்தில்
நீ
யாரும் எட்ட
முடியாத
உயரம் ...

உலகத்தில்
நீ
உன்னதம்

உன்
வாழ்க்கையில்
நீ
சரித்திரம் ...

மற்றவர்
வாழ்க்கையில்
நீ
வழிகாட்டல் ...



நீயோ
சொர்க்கத்திற்குப்
போய்விட்டாய்
நாங்களோ
இன்னும்
நரகத்தில்...


நாங்கள்
உன்னைப்
பார்த்துக்கொள்ள
முடியாத
தூரத்திற்கு
நீ போய்விட்டாலும்
நீ எங்களைப்
பார்த்துக்கொள்ளும்
தூரத்தில்தான்
இருப்பாய்
என்று நம்புகிறோம்...


நீ
அம்மாவாக
இல்லையென்றால்
இனி
எங்களுக்கோர்
பிறப்பே
வேண்டாம்...


அம்மா நீ
இறக்கவில்லை
ஒரு அவதாரம்
தன் கடமையைச்
செய்துவிட்டுப்
போய்விட்டாய்
அவ்வளவுதான் ...


2 comments:

ரேவா said...

பார்த்துக்கொள்ள
முடியாத
தூரத்திற்கு
நீ போய்விட்டாலும்
நீ எங்களைப்
பார்த்துக்கொள்ளும்
தூரத்தில்தான்
இருப்பாய்
என்று நம்புகிறோம்...

அம்மா என்றும் உங்கள் அருகில் தான் இருப்பார் மயாதி....

Anonymous said...

மயாதி எப்ப நடந்தது? படிக்கிற தைரியமே இல்லை உடம்பெல்லாம் நடுங்குது....தாயின் பெருமையை சொல்லி வலிகளை மறைக்க முயன்றிருக்கிறாய் முடியாது தான் உணரமுடிகிறது..உனக்கு ஆறுதல் சொல்லமுடியுமான்னு எனக்கு தெரியலை....உன்னை மாதிரி தான் நானும் இன்னும் அப்பாவின் மறைவில் இருந்து மீளவில்லை அதனாலோ என்னவோ இந்த வலியை துல்லியமாய் உணரமுடிகிறது..அம்மா ஆன்மா சாந்தியடைய வாழ்த்துக்கள்..