
கர்ப்பத்தைப்
போலதான்...
எப்படித்தான்
பொத்தி வைத்தாலும்
கடைசியில்
உன்னைப்
பார்த்ததும் ...
பிறந்து விட்டது
காதல்
நீ கோயிலுக்குப்
போனாய்..
சாமி
சந்நியானத்தில்
இருந்த
பூக்கள் எல்லாம்
பொறாமைப்
பட்டுக் கொண்டன
உன் கூந்தல்
பூவைப் பார்த்து
எப்போதாவது
என் காதில்
விழுகின்ற நீ
பேசுகிற
ஒவ்வொரு
வார்த்தையையும்
ஒவ்வொரு நோட்டுப்
புத்தகத்தில்
எழுதி வைக்கிறேன்
ஒவ்வொன்றும்
கவிதைப் புத்தகம்
ஒரே பூ
திரும்பத் திரும்ப
பூக்கின்றது ....
உன் வெட்கம்
நிறையப்
பெண்கள்
வெட்கத்தைத்
தொலைத்து
விட்டார்கள்
நான் உன்
வெட்கத்தில்
தொலைந்து
விட்டேன்...
பாடப் புத்தகத்தை
எத்தனை முறை
படித்தாலும்
ஏறாத இந்த
மரமண்டைக்கு
ஒரே பார்வையில்
காதலிக்கக்
கற்றுக் கொடுத்துவிட்டு
போகிறாய்...
7 comments:
கலக்கல் கவிதை! வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்க...வாழ்த்துகள்:)
வாழ்த்துக்கள்! தமிழகத்தில் கவிஞர்கள் எண்ணிக்கை மிக அதிகம், அதில் தனித்த அடையாளத்தைப் பிடிக்க வேண்டுமானால் நிறைய உழைக்க வேண்டும். தலைப்பே ஒரு தனிக்கவிதை சொல்ல வேண்டும்; பின் வரும் கவிதை ஒரு பெருங்கதையே சொல்ல வேண்டும். இணையத்தில் சிக்காத கவி சரக்கா? தேடுங்கள் நண்பரே!
இளைய கவி said...
கலக்கல் கவிதை! வாழ்த்துக்//
நன்றி நண்பரே
Thamizhmaangani said...
தொடர்ந்து எழுதுங்க...வாழ்த்துகள்:)//
நன்றி நண்பி
ஜெகநாதன் said...
வாழ்த்துக்கள்! தமிழகத்தில் கவிஞர்கள் எண்ணிக்கை மிக அதிகம், அதில் தனித்த அடையாளத்தைப் பிடிக்க வேண்டுமானால் நிறைய உழைக்க வேண்டும். தலைப்பே ஒரு தனிக்கவிதை சொல்ல வேண்டும்; பின் வரும் கவிதை ஒரு பெருங்கதையே சொல்ல வேண்டும். இணையத்தில் சிக்காத கவி சரக்கா? தேடுங்கள் நண்பரே!//
நன்றி
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
vera enna solla
Post a Comment