1.31.2010

கவிதை

எவ்வளவு
எழுதினாலும்
உன்னைப்பற்றி
ஒரு
கவிதையேனும்
எழுதாமல்
முடியமாட்டேன்
என்று
அடம்பிடிக்க
கற்றுக் கொடுத்திருக்கிறாய்...
என் பேனாவுக்கும்

பகுத்தறிவு

அறிவாளி
என்று
தப்பட்டம்
அடித்துக்கொள்பவனுக்கும்
முட்டாளுக்கும்
மொத்தம் இருக்கிறது
ஆறு அறிவுதான்...

ஆறாவது அறிவு

மனிதனுக்கு
எத்தனை
அறிவு?
பதில்
சொல்லவாவது
பயன்படுகிறது
ஆறாவது
அறிவு

வெளி

உனக்கும்
எனக்கும்
இடையே
எதுவும்
இல்லை
காதலைத்
தவிர ...

அனுதாபம்

பக்கத்து
வீட்டுப் பிள்ளைக்கு
காய்ச்சல்
என்றவுடன்
அனுதாபப் பட
உதவும்
அதே மனதுதான்
அந்தப்பிள்ளையை
வைத்திய சாலைக்கு
அழைத்துச் செல்ல
காரைக் கடன்
கேட்கும்போது
பெற்றோல்
முடிந்துவிட்டது என்று
பொய் சொல்லவும்
உதவுகிறது