| | | உன்னோடு பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென என்ன வரம் வேண்டும் என்ற கடவுளிடம் இப்படியே பேசிக்கொண்டே இருக்க வேண்டும் மறைந்துபோ என்றேன். இப்போதுதான் யோசிக்கிறேன் வரம்தரும் சாக்கில் உன்னைப் பார்க்கத்தான் வந்திருப்பாரோ? இதுதான் என் முதல் ஜென்மமாக இருந்துவிடவேண்டும். இன்னும் ஆறு ஜென்மங்கள் மிச்சம் இருக்குமே உன்னோடு வாழ்வதற்கு! நான் எத்தனை கவிதை எழுதினாலும் எனக்காக எழுதப்பட்ட ஒரே கவிதை நீ . நீ கனவில் வருவாய் என்பதற்காகவே விழித்துக்கொண்டிருக்கிறது தூக்கம்..... உன்னை மறக்கமுடியாமல் இறக்கப்போனேன். எமன் சொன்னான் உன்னை மட்டும்தான் கொள்ளமுடியும் உனக்குள் இருக்கும் அவளை வெளியேற்றிவிட்டு வா. அதைவிட இறக்காமலேயே இருந்துவிடலாம் .... இந்த நிமிடத்தோடு உன்னை மறந்துவிடுவதென்று முடிவெடுத்தேன்அடுத்தநிமிடம் வரவேயில்லை. உன்னை அளவுக்கதிகமாக காதலித்து அதுதான் நஞ்சாகி என்னைக் கொன்றுவிட்டது.. வாழும்போது முழுமையடையாத வாழ்க்கை உனக்காக சாகும்போது முழுமையடைந்து விட்டது .. எந்த வேற்று மொழியின்கலப்பும் இல்லாமல் இருக்கும் ஒரே மொழி மௌனம் . மௌனம் பேசுவதற்காக அல்ல புரிய வைப்பதற்காக .... |
4.10.2011
என் காதலியிடம் பேச நினைப்பவை...
3.17.2011
நினைவே கவிதையாய்
நிறையப் பெண்கள்
பார்ப்பதற்கு வேண்டுமானால்
அழகாய் இருக்கலாம்
நீ மட்டும்தான்
நினைப்பதற்கே
அழகாய் இருக்கிறாய்
நினைப்பதும் ஒரு
பசிதான்
என்ன எவ்வளவு
நினைத்தாலும்
அது அடங்குவதில்லை
சாமியை நினைத்தால்
தியானம்
உன்னை நினைத்தால்
ஞானம்
காதலிப்பதைப் போல
இலகுவான வேலை
இல்லை
காதலிக்க வைப்பதைப்போல
கடினமான
வேலையும் இல்லை
எனக்கு வாழ்வதில்
எந்தக் கஷ்டமும்
இல்லை
உன்னை நினைத்தாலே
போதும்
அதேபோல்
சாவதிலும் எந்த
கஷ்டமும் இல்லை
உன்னை
மறந்தாலே போதும்
நான் எப்போதும்
தற்கொலை
செய்ய நினைத்ததே
இல்லை -உன்னை
எனக்குக்
காட்டிய
இந்த வாழ்க்கையை
எப்படி என்னால்
கொலை செய்ய
முடியும் ...
2.24.2011
வாழ்க்கை வழக்கு
தீர்ப்பு
வாசிக்கப்பட்டுவிட்டது...
சட்டபூர்வமாக
செயலிழக்கச்
செய்யப்பட்டது
திருமணம்
குழந்தைக்கும்
அவளுக்கும்
ஜீவனாபாயமும்
அறிவிக்கப்பட்டது
இனி அவள்
திருமதி என்று
போட்டுக்கொள்ள
முடியாது
ஆனால்
விட்டுப்போனவன்
குழந்தையின்
பெயரின் முன்னாலும்
அவன் பெயரை
நீக்கமுடியாதப்டி
விட்டுச் சென்றிருந்தான்...
ஆணாய்
இருப்பது எப்பவும்
மவுசுதான்
வழக்கு
முடிந்தபின்
அவனைக் கூட்டிச்
செல்ல
அவனது புது
மனைவி
வந்திருந்தாள்
அவளை அழைத்துச்
செல்ல
செல்லமா மாமி
மட்டுமே
வந்திருந்தாள்
செல்லமா மாமி
வேறுயாருமில்லை ...
சுமங்கலிகள்
நடத்திவைத்த
அவள் திருமணத்திற்கு
அனுமதிக்கப்படாத
விதவை...
2.23.2011
கொஞ்சமாவது பேசிவிடு ...
நான்
இறந்தபின்பு
மற்றவர்களைப்போல
நீயும்
மௌன அஞ்சலி
செய்துவிடாதே
என் மரணத்திற்கு
காரணமே
உன் மௌனம்தானே
உன் பெயருக்கு
அர்ச்சனை
போட்டேன்
நீ அர்ச்சிக்கப்
பட்டாயோ
இல்லையோ
சாமி அர்ச்சிக்கப்பட்டது
எல்லோருக்கும்
வீடு
முகவரியாக
இருக்கும்
உன் வீட்டுக்கு
மட்டும்
நீ
முகவரியாய்
இருக்கிறாய்
உனக்கு
குழந்தை மனசு
என்று
அடிக்கடி உன்
அப்பா சொல்கிறார்
எனக்கு
குழந்தைகள் மீது
கொள்ளைப் பிரியம்
என்பது
தெரியாமல்
அம்மா அப்பா
இல்லாதவர்கள்
மட்டும்
அனாதையில்லை
நீ இல்லாத
நானும்
அனாதைதான்
பேசு என்றேன்
என்ன பேச
என்றாய்
ஏதாவது பேசு
என்றேன்
நீங்களே
சொல்லுங்கள்
என்றாய்
அதுதானே சொல்கிறேன்
என்றேன்...
இப்படியே நீண்ட
நேரம்பேசிக்
கொண்டிருந்தோம்
எதுவுமே பேசாமல்
அர்த்தங்களைச்சொல்ல
வார்த்தைகள் மட்டும்
போதுவதில்லை...
என்ன வேண்டும்
என்றேன்
எதுவுமே வேண்டாம்
நீங்கள்
மட்டும் போதும்
என்றாய்
என்னைத்தர
முடியாது
என்றேன்
கோபித்துக்கொண்டாய் ..
என்னைத் தந்து
என்னைத் தந்து
உனக்கு சுமையாகக
முடியாதுஉன்னைத்
தந்துவிடு
எனக்குள்
வைத்துக்கொள்கிறேன்
சின்னச் சின்ன
விடயத்திற்காகவெல்லாம்
கோபித்துக் கொள்கிறாய்
நீ கோபித்துக்
கொள்வதால்
சின்ன சின்ன
விடயங்கள் கூட
பெரிதாகிப்
போகின்றன ....
உன்னோடு
சேர்ந்து
வாழா விட்டாலும்
பரவாயில்லை
சேர்ந்து சாக
மட்டும் முடியாது
உனக்கு முன்னமே
செத்துவிட
வேண்டும்
காதல் பா
கடவுள்
இல்லையென்பவன்
நாத்திகனாகலாம்
காதல்
இல்லையென்பவன்
மனிதனாகவே
முடியாது
கடவுளால்
வரம் மட்டுமே
தர முடியும்
காதலால்தான்
வாழ்க்கையையே
தர முடியும்
கடவுள்
இல்லாமல்
வாழ்ந்துகூட
விடலாம்
காதல் இல்லாமல்
செத்துவிடக் கூட
முடியாது
கடவுள்
மதங்களால்
பிரிக்கிறார்
காதல்
மனங்களால்
இணைக்கிறது
கடவுள்கள்
நிறையப் பேர்
இருக்கிறார்கள்
காதல்
ஒன்றுதான்
பேசாமல்
காதலையே
கடவுளாக்கி
விடலாமோ
என்றுகூடத்
தோன்றுகிறது...
Subscribe to:
Posts (Atom)