
12.25.2011
ஆதலால் காதல் செய்வீர்
மோட்சம்
வேண்டுமென்றால்
புண்ணியம்
செய்யுங்கள்
இருக்கும்போதே
மோட்சம்
வேண்டுமென்றால்
காதல்
செய்யுங்கள்
11.10.2011
தனிமை
10.01.2011
வாழ்க்கை நிறையக் கவிதை
கன்னத்தை வருடும்
கவலைகளை
கழிந்து விடும்
என் ஒவ்வொரு
கவலைகளைப்
வாழ்க்கை நிறையக் கவிதை
தனிமையை
நேசிக்க
வைக்கும்
இரவுக்கு
நன்றி...
ஒரு
ஏகாந்தத்திற்குள்ளும்
ஒளிந்திருக்கலாம்
ஒரு மாபெரும்
புரட்சியின்
இரைச்சல் ...
யதார்த்த
முரண்பாடுகளிலும்
முளைக்கலாம்
ஒரு ............!
உழைத்துக்
கொண்டிருக்கும்
விழிப்புலன்
அற்றவனைப்
பார்த்தபோது
வெட்கித்
தலைகுனிந்தது
என் விழி...
சாவதில் ஒன்றும்
பயமில்லை
எனக்கு
ஆனால்
அதற்கு முன்
வாழ வேண்டும்
காத்திருத்தல்
9.04.2011
ஒரு காதலின் கதை
உன்னைப் பார்த்த
8.31.2011
என்னோடு பேசுகிறேன்
7.29.2011
காதலில் அடிக்கடி சொல்லப்படும் பொய்கள்
7.16.2011
ஒரு அவதாரத்தின் கதை ....

7.04.2011
கேள்விக்குறியாகும் மட்டக்களப்பு மருத்துவ பீடத்தின் எதிர்காலம்
வடக்கிலே மட்டும் மருத்துவ பீடத்தைக் கொண்டிருந்த எமக்கு சில வருடங்களுக்கு முன்பு கிழக்கிலே மட்டு நகரில் வரப்பிரசாதமாக வாய்க்கப் பெற்றது இன்னொரு மருத்துவ பீடம். முற்று முழுதாக தமிழர்களினால் மட்டுமே நிர்வாகிக்கப்படும் மட்டக் களப்பு மருத்துவ பீடத்தையும் யாழ் மருத்துவ பீடம் போல் தரத்தில் உயர்த்துவது எமது கடமையாகும்.
ஆனாலும் இப்போதுள்ள நிர்வாகத்தின் நடவடிக்கைகள் காரணமாக அந்த மருத்துவ பீடத்தின் தரம் கேள்விக் குறியாகியுள்ளது.
ஒவ்வொரு துறைக்கும் பல பேராசிரியர்களை கொண்டிருக்கும் மற்றைய மருத்துவ பீடங்களே உள் நாட்டு மருத்துவபட்டதாரிகள் வைத்திய சேவையில் இணைந்து கொள்வதற்கு முன்பு அவர்களை தற்காலிக விரிவுரையாளர்களாகசேர்த்துக் கொண்டு கனிஷ்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவ வழி செய்கிறார்கள்.
ஆனால் போதியளவு விரிவுரையாளர்கள் இல்லாத நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மருத்துவ பீடத்தின்நிர்வாகமோ உள்நாட்டு மருத்துவ பட்டதாரிகள் தற்காலிக சேவை வழங்க முன் வந்தாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
மாறாக அவர்கள் அறிந்த அல்லது அவர்களுக்கு வேண்டிய வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை ஏற்றுக் கொள்வதிலேயேஆர்வம் காட்டுகிறார்கள். வெளிநாட்டுப் பட்டதாரிகளின் கற்றல் முறை வேறு , உள்நாட்டு கற்றல் முறை பரீட்சை முறை
என்பவை வேறு.
இலங்கை முழுவதும் பொதுப்பரீட்சையாக நடைபெறும் இறுதியாண்டு மருத்துவப் பரீட்சைக்கு மாணவர்களை தயார் படுத்துவதில்உள்நாட்டு பட்டதாரிகளாலே உதவமுடியும்.
குறிப்பாக உள்நாட்டு பட்டதாரிகள் மருத்துவ சேவைக்கு நேரடியாக சேர்த்துக் கொள்ளப் படும் போதும் வெளிநாட்டுப் பட்டதாரிகள்போட்டிப் பரீட்சை மூலம் மீண்டும் அவர்களின் திறமை பரீட்சிக்கப் பட்டே சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். திறமையான வெளிநாட்டு
பட்டதாரிகள் அந்தப் பரீட்சையில் சித்தி பெற்று மருத்துவ சேவையில் இணைந்து கொள்ள அந்த பரீட்சையில் சித்தி பெற முடியாத அல்லது சித்தி பெற முயற்சிக்காத சில வெளிநாட்டு பட்டதாரிகளே மருத்துவ பீட நிர்வாகத்தில் உள்ள சிலரின் அறிமுகத்தை வைத்து விரிவுரையாளர்களாக இணைந்துகொள்வது மருத்துவ பீடத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
மேலும் மருத்துவ பீடத்தின் விரிவுரையாளர் நேர்முகப் பரீட்சையில் மருத்துவ பட்டதாரி நீக்கப் பாட்டு வேறு துறையில் பட்டம் பெற்ற ஒருவர் சித்தி பெறும் அதிசயமும் மட்டு மருத்துவ பீடத்திலேயே நடைபெறும்.
இதுசம்பந்தமாக எல்லோரும் விழித்துக் கொண்டு நமது எதிர்ப்பை வெளிக்கொணர வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும்.
6.16.2011
காதல் யாப்புக்கள்
5.25.2011
காதல் பழமொழிகள்
காதல் படுத்தும் பாடு
நான் வாழ்வதற்காகத்தான் பிறந்திருக்கிறேன் என்று தவறாக நினைத்துக்
கொண்டுவாழ்ந்து கொண்டிருந்தேன் .உன்னைப்பார்த்த பின்புதான் நான்
பிறந்தததுகாதலிப்பதற்காக என்று உணர்ந்துகொண்டு வாழ்வதை விட்டு
காதலிக்கத்தொடங்கிவிட்டேன்.
காதலுக்கும் வாழ்க்கைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் . வாழ்வதற்கு
கட்டாயம்உயிரோடு இருந்தாக வேண்டும் .காதலிப்பதற்கு உயிர் ஒன்றும்
அவசியமில்லை.
வாழ்க்கையை இழந்தபின் கடவுளாக இருந்தால் உயித்தெழலாம். காதலை
இழந்தபின் கடவுளாக இருந்தால்கூட உயிர்த்தெழ முடியாது.
......................................................................................................................................................................
அவளைப்பற்றி ஒரு கவிதை சொல்லச் சொன்னாள்.நான் மௌனமாகவே
இருந்தேன் . கோபித்துக்கொண்டு போய் விட்டால். மௌனத்தை புரிந்து
கொள்வது எப்படி என்று அவளுக்குச் சொல்லிக்கொடுக்காதது என் தவறுதான் .
அவளிடம் ஒரு முத்தம் கேட்டபோது மறுத்துவிட்டு வீட்டுக்குப் போனபின்பு
போன் பண்ணி நீ பாவம்டாஎன்று கொஞ்சினால் . அவளுக்குத் தெரியாது அவள்
தருகின்றமுத்தங்களை விட தராத முத்தங்களுக்குத்தான் சுவை அதிகம் என்று.
கோயிலுக்குப் போகும் பெண்கள் எல்லா பூ பறித்துக்கொண்டு சாமிக்குச்
சாத்தி விட்டு வருவார்கள். அவள் மட்டும் வெறும் கையேடு போய்
புன்னகைத்து விட்டு வருவாள் .சாமியும் நானும் மட்டும் புரிந்து கொள்வோம் .
தடுக்கி விழுந்த அவள் எழுந்து போய் விட்டால்.என்னால் இன்னும் எழ முடியவில்லை.
..............................................................................................................................................................
வானத்தில் மிதக்க சிறகு வேணும். காதலில் மிதக்க கனவு வேணும்.
கவிதை எழுத மூளை தேவையில்லை காதல் போதும்.
வாசிப்பு அறிவை பூரணமாக்கும் காதல் முழு மனிதனையே பூரணமாக்கும்.
தாய்க்குப்பின் தாரம் கடவுளுக்கு முன் காதலி.
நான் வாழ்வதற்கு உயிர் தேவையில்லை அவள் போதும்.
BY- மயாதி
5.10.2011
முத்தமின்றி ?
அளவுக்கதிகமாகக்
நஞ்ஞாகி
விடுவதில்லை
முத்தம்
முத்தம்
கொடுத்ததால்
கோபித்துக்கொண்ட
காதலியின்
கோபத்தைப்
போக்கியது...
ஒரு
முத்தம்
உனக்கு
ரகசியமாய்
கொடுக்கிற
முத்தத்தை
வெட்கத்தில்
வெளிப்படுத்தி
விடுகிறாய்...
வார்த்தைகளால்
வெளிப்படுத்த
முடியாத
காதலின்
விஸ்த்தீரத்தை
சிலவேளைகளில்
ஒற்றை
முத்தம்
வெளிப்படுத்தி
விடுகிறது
பேசுகிற
வார்த்தைகள்
தேவையற்றதாகிப்
போகலாம்
கொடுக்கிற
முத்தம்
எப்போதும்
தேவையற்றதாகிப்
போய்விடாது
பொல்லாத
காதல்...
ஒவ்வொரு
முத்தத்தின்
முடிவிலும்
தொடக்கி
வைத்து விடுகிறது
அடுத்த
முத்தத்திற்கான
எதிர்பார்ப்பை
உயிரை
இணைத்துவிட்டு
உதடு
பிரிந்து
விடுகிறது....
உனக்கு
நான்
தருகிற
ஒவ்வொரு
முத்தத்தின்
முடிவிலும்
உனக்கும்
எனக்கும்
இடையே
சின்னதாய்
ஒரு
இடைவெளி
வந்தாலும்
நுழைந்து விடுகிறது
ஒரு
முத்தம்
எனக்கு
காதலிக்காமல்
எப்படி
வாழத்தெரியாதோ
அப்படித்தான்
முத்தமிடாமலும்
காதலிக்கத்
தெரியாது
அருசுவைகளுக்கு
அப்பாற்பட்டது
முத்தத்தின்
சுவை.....
5.08.2011
கொஞ்சம் வார்த்தை நிறையக் காதல்
4.10.2011
என் காதலியிடம் பேச நினைப்பவை...
| | உன்னோடு பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென என்ன வரம் வேண்டும் என்ற கடவுளிடம் இப்படியே பேசிக்கொண்டே இருக்க வேண்டும் மறைந்துபோ என்றேன். இப்போதுதான் யோசிக்கிறேன் வரம்தரும் சாக்கில் உன்னைப் பார்க்கத்தான் வந்திருப்பாரோ? இதுதான் என் முதல் ஜென்மமாக இருந்துவிடவேண்டும். இன்னும் ஆறு ஜென்மங்கள் மிச்சம் இருக்குமே உன்னோடு வாழ்வதற்கு! நான் எத்தனை கவிதை எழுதினாலும் எனக்காக எழுதப்பட்ட ஒரே கவிதை நீ . நீ கனவில் வருவாய் என்பதற்காகவே விழித்துக்கொண்டிருக்கிறது தூக்கம்..... உன்னை மறக்கமுடியாமல் இறக்கப்போனேன். எமன் சொன்னான் உன்னை மட்டும்தான் கொள்ளமுடியும் உனக்குள் இருக்கும் அவளை வெளியேற்றிவிட்டு வா. அதைவிட இறக்காமலேயே இருந்துவிடலாம் .... இந்த நிமிடத்தோடு உன்னை மறந்துவிடுவதென்று முடிவெடுத்தேன்அடுத்தநிமிடம் வரவேயில்லை. உன்னை அளவுக்கதிகமாக காதலித்து அதுதான் நஞ்சாகி என்னைக் கொன்றுவிட்டது.. வாழும்போது முழுமையடையாத வாழ்க்கை உனக்காக சாகும்போது முழுமையடைந்து விட்டது .. எந்த வேற்று மொழியின்கலப்பும் இல்லாமல் இருக்கும் ஒரே மொழி மௌனம் . மௌனம் பேசுவதற்காக அல்ல புரிய வைப்பதற்காக .... |
3.17.2011
நினைவே கவிதையாய்
2.24.2011
வாழ்க்கை வழக்கு
2.23.2011
கொஞ்சமாவது பேசிவிடு ...
என்னைத் தந்து