நீ இறந்த பின்பாவது என்னைக் காதலிப்பாய் என்ற நம்பிக்கையில் அதே சோகத்தோடு காத்திருக்கிறேன்.
***************************
நான் இறந்தபின்பும் உயிர்வாழ்வதாய் நடித்துக் கொண்டிருக்கிறேன் எனக்குள் உயிர்வாழும் உன்னையும் சேர்த்து புதைத்து விடுவார்கள் என்ற பயத்தில்
********************************** நான் இறந்த பின்பு உன்னைப்பற்றி எல்லோரிடமும் சொன்னேன்! எல்லோரும் கவலைப்படுகிறார்கள் உன்னைப்பார்க்காமலே இறந்து விட்டதாக
*****************************
என்னைக் கொலை செய்தபின்புகூட என்னை எடுத்துப் போக முடியவில்லை எமனால்.... எமனல்ல எவன் வந்தாலும் எனைப் பிரிக்க முடியாது உன்னிலிருந்து....
***************************
உன்னை மறந்து கொண்டு உயிர்வாழ்வதைவிட... நினைத்துக் கொண்டு இறப்பது மேல் !
***************************
என் உடலை எரித்து விட்டார்கள் பரவாயில்லை எனக்கு உயிர் மட்டும் போதும் உன் உடலின் ஒரு மூலையில் இருந்து வாழ்ந்து விட்டுப் போகிறேன்
************************
என்னை எரிக்கும் முன்பு... நீ வருவாய் என்று பார்த்த்திருந்தேன் பெண்கள் சுடுகாட்டுக்கு வரக்கூடதென்று உன்னைத் தடுத்து விட்டார்கள் நீ இல்லாத சுடுகாட்டில் நான் எரிய மாட்டேன் என்று எழுந்து வந்துவிட்டேன்
******************************
என் கல்லறையில் வைக்கப்படும் பூக்களையெல்லாம் சேமித்துக் கொண்டிருக்கிறேன்! என்றோ ஒருநாள் நீ வரும்போது தருவதற்காய்....
ஆபத்து வந்தாலோ அல்லது தாங்க முடியாத ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலோ `` கடவுளே என்றுதான் ஆத்திகர்கள் அழைப்பார்கள். நாத்திகர்கள் எப்படி அழைப்பார்கள்? நானும் கடவுளைத்தான் துணைக்கழைப்பது வழக்கம். ஆனாலும் சிலவேளைகளில் கடவுளோடு ஆத்திரம் ஏற்படும் பொழுதுகளில், என்னடா இந்தக்கடவுள் என்று அழுத்துக் கொள்ளும் பொழுதுகளில் உதவியாக இருக்குமே , அதுதான் கேட்கிறேன் என் நாத்திக நண்பர்களே ! ஆபத்து வேளைகளில் யாரை அழைக்கிறீர்கள்.
.......................................................................................................................................................................... கடவுளும் சாதாரண மனிதர்களைப்போல தவறு விடுகிறானே என்று கூட எனக்குத் தோன்றுவதுண்டு.
ஒரு குழந்தை வயது வெறும் 12 . ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வரை சாதாரண ஒரு பிள்ளையாக , சுட்டியாக இருந்தது. திடீரென தன் கேட்கும் திறனை இழந்தது. பதறிப்போன பெற்றோர் குழந்தையை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வைத்தியர்களுக்கே சவாலாக அமைந்தது அந்தக் குழந்தையின் நோய்.
என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தர்கள், குழந்தையோ கொஞ்சம் கொஞ்சமாக தன் புலன்களை இழந்தது.கேட்கும் திறனைத்தொடர்ந்து பார்க்கும் திறனும் குறையத் தொடங்கியது.
அப்போதுதான் குழந்தைக்கு உலகத்திலேயே வெறும் சில நூறு பேர்களுக்கே ஏற்பட்டு இருக்கும் ஒரு அரிதான நோய் ஏற்பட்டு இருப்பதை வைத்தியர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். இருந்தும் என்ன பயன் எந்த மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியாத அந்த நோய் குழந்தையை கொஞ்சம் கொஞ்சமாக கொள்வதை கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
இங்கே கடவுள் யாரைத் தண்டிக்கிறான்
அந்தக் குழந்தையையா?
அந்தக் குழந்தையின் உறவினர்களையா?
யாரென்றே தெரியாத அந்தக் குழந்தைக்காக கவலைப் படும் உங்களையா?
சில காலங்களுக்கு முன் ஓடியாடித்திரிந்த அந்தக் குழந்தை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தன் திறன்களை இழந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் தன் உணவை விழுங்கும் திறனையும் இழந்து போனது. பசித்தால் வாய்திறந்து சொல்ல முடியாது, வயிற்றைத் தட்டிக் காட்டும். வாயினால் விழுங்க முடியாது, மூக்கின் ஊடாக வயிற்றுக்குள் செலுத்தப்பட்டிருக்கும் ஒரு குழாயின் ஊடாக திரவ சாப்பாடுகளை மட்டுமே வழங்க முடியும் .
மூக்கின் உள்ளே ஒரு தும்பு போனாலே படும் அவஸ்தைகள் நாம் அறிவோம். இந்தக்க் குழந்தைக்கோ மூக்கின் ஊடான ஒரு தடித்த குழாய்தான் சாப்பாடு வழங்கிக் கொண்டிருக்கிறது.
இன்று வயிற்றின் ஊடாக ஒரு குழாயை செலுத்தி நிரந்தரமாக அக்குழாயின் ஊடாக சாப்பாடு வழங்குவதற்கான ஒரு சத்திர சிகிச்சை நடைபெறப்போகிறது.
அதற்கு முன்பு, நேற்று அந்தக் குழந்தை தன் குறைந்து போன பார்வைப்புலத்தோடு வரைந்த ஒரு ஓவியத்தைப் பார்த்தேன்.
இதை நான் இன்டர் நெட்டில் போடவா எல்லோரும் பார்ப்பார்கள் என்று எழுத்தின் மூலமாக கேட்டேன் . அந்த நேரத்தில் பூரிப்படைந்த அந்த பிஞ்சு மனசு உடனடியாக மேலும் மூன்று படங்களை வரைந்து கொடுத்தது சில மணி நேரங்களில். அப்போது அந்தப் படங்கள் அழகாக இருக்கிறது என்று சைகையிலே சொன்னேன் , தன் நன்றியை வார்த்தைகளில் சொல்ல முடியாத அந்தப் பிள்ளை அந்தப் படங்களை தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டது .
அந்தப் படங்களை நீங்களும் பாருங்கள். அழகாக இருக்கிறது என்று ஒரு வார்த்தையாவது சொல்லுங்கள். சத்திர சிகிச்சை முடிந்து வலியோடு வருகின்ற அந்த குழந்தைக்கு உங்கள் வாழ்த்துக்கள் நிச்சயம் ஒரு துளி சந்தோசத்தையாவ்து கொடுக்கும்.
அந்தக் குழந்தையால் தமிழை வாசிக்க முடியாது, ஆகவே தயவு செய்து ஆங்கிலத்திலே சிறு குறிப்பாக இந்த ஓவியங்கள் ``அழகாக இருக்கிறது `` போன்று சிறிய வார்த்தைகளை சொல்லிவிட்டுப் போங்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு அந்தக் குழந்தையால் பார்க்க முடியும் என்று சொல்ல முடியாது , அதுவரை அது இப்படி சந்தோசம் தரும் சிறு சிறு விடயங்களையாவது பார்க்கட்டும்.
அதுமட்டுமல்ல அந்தக் குழந்தையின் உறவினர்களுக்கும் உங்கள் வாழ்த்துக்கள் ஒரு துளி சந்தோசத்தையாவது கொடுக்கும்.
நீயும் நானும் ஒரு பஸ் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தோம்...
ஓட்டுனருக்கு எல்லோரும் திட்டிக்கொண்டிருந்தார்கள் மெதுவாக ஓட்டுவதாகச் சொல்லி... நான் மட்டும் வேகமாக ஓட்டுவதாகச் சொல்லி திட்டிக்கொண்டிருந்தேன்!
நடத்துனர் எங்கே போக வேண்டும் என்றதற்கு உன் மனதிற்குள் என்றுவிட்டேன்!
எல்லோரையும் போல பஸ் டிக்கெட்டை பத்திரப் படுத்திக் கொண்டேன் ! பரிசோதகருக்குப் பயந்தல்ல... உன்னோடு பயணித்த இந்த டிக்கெட்டைவிட நல்ல ஞாபகச்சின்னம் வேறென்ன இருக்க முடியும்...
பஸ் வண்டி ஒவ்வொரு நிறுத்தத்திலும் தன் பயணத்தைப் புதுப்பித்துக் கொண்டது... நீயும் ஒவ்வொரு புன்னகையின் முடிவிலும் உன் மௌனத்தைப் புதுப்பித்துக் கொண்டாய் ...
நீ என்னைப் பார்ப்பதே இல்லையே என்று கவலைப் பட்டுக்கொன்டிருந்தேன் ! பிக்பொக்கட் காரன் என் பேசை எடுத்ததை காட்டிக்கொடுத்து நிரூபித்துவிட்டாய் நீயும் என்னைப்பார்க்கிறாய்....
புரிந்து கொண்டேன் உன்னைப்போலத்தான் எனக்கும் நேரே பார்க்க தைரியம் இல்லையென்பதையும் !
ஒன்று மட்டும் புரியவில்லை எப்படி நான் பார்க்காத நேரத்தைச் சரியாக கண்டுபிடித்து நீ பார்க்கிறாய்..?