
8.29.2009
என் காதல் பக்கம்
கொஞ்சம் கொஞ்சமாய்
பழகிய
வாழ்க்கை....
ஒரு நொடி
விபத்தில்
முடிந்துபோகலாம்....
கொஞ்சம் கொஞ்சமாய்
சேர்த்து
வைத்த
நட்பு
ஒரு வார்த்தையில்
முடிந்துபோகலாம்
கொஞ்சம் கொஞ்சமாய்
சேர்த்து வைத்த
மானம்
ஒரு குற்றத்தில்
முடிந்துபோகலாம்
கொஞ்சம் கூட
சேமிக்கவில்லை
முடிந்து போனது
ஏதோ ஒன்று!
உன் பார்வையில்...
உயிரும்
இருக்கிறது
உடலும்
அப்படியேதான்
இருக்கிறது...
வாழத்தான்
முடியவில்லை
இத்தனை நாளாய்
உயிரும் உடலும்தான்
`நான்` என்றிருந்தேன்
இரண்டுக்கும் அப்பாலும்
`நான் ` இருக்கிறேன்
என்று
நீதான்
வெளிப்படுத்தினாய்....
******************************
நீ பொக்கிஷம்!
பொத்தி வைக்க
முடியாமல்
கொட்டிவிடுகிற
கவிதைகளை
பொறுக்கி எடுக்கிறேன்
நீயோ
`பொறுக்கி` என்று
திட்டுகிறாய்
மற்றவர்களோ
கவிஞன்
என்கிறார்கள்...
************************
எத்தனை
முறைதான்
சேமிப்பது....
இடம் போதாமல்
உன் அழகு
நிரம்பி வழிகிறது
என் கண்களில்
நான்
சிவனாகப்
பிறந்திருக்கலாம்
நெற்றிக் கண்ணாவது
கொஞ்சம்
இடம் தந்து
உதவியிருக்கும்....
************************
நீ காதலைப்
பிரசவித்துவிட்டு
காதலிக்காமல்
போய் விட்டாய்....
நம் காதல்
`குழந்தையை`
வாழ
வைப்பதற்காகவேனும்
உயிவாழ
வேண்டிய
கட்டாயத்தில்
இருக்கிறேன்
நான்
***********************
என்
கவிதை மொட்டுக்கள்
காத்திருக்கின்றன!
நீ வருகின்றாய்
பூக்கின்றன
நீ போகின்றாய்
வாடிப்போகின்றன .....
பசி வந்தால்
பத்தும் பறக்கும்
நீ வந்தால்
பசியும்
பறக்கும்....
நீ
வரும் போது
என்னை கொண்டு
வருகின்றாய்
போகும்போது
கொன்று
போகின்றாய்
*********************
நான் என்பது
நரகம்...
நீ இல்லாமல்
சொர்க்கத்தில்
இருப்பவர்கள் கூட
மீண்டும்
பிறக்க
ஆசைப்படுகிறார்கள்
நீ இருக்கின்ற
உலகத்தை விடவா
சொர்க்கம்.....
*********************
நீ பறித்த
பூ
இறுதிவரை
வாடவேயில்லை....
நீ பறிக்காத
பூ வாடிவிட்டது
நீ
பறிக்கவில்லை
என்ற
ஏக்கத்தில்...
பூவாக
இருந்தாலும்
ஆணாக
இருந்தாலும்
வாடித்தான்
போகவேண்டியிருக்கு
காதலில் ......
*****************
8.10.2009
ஒரு காதல் கடிதம்
நீ
எங்கேயோ
இருந்தாலும்
இங்கேதான்
இருக்கிறாய்.....
நீயோ
தொலைத்துவிட
துடிக்கின்றாய்
நானோ
காப்பாற்றிவிட
துடிக்கிறேன்
உனக்கும்
எனக்குமான
இடைவெளியை....
தூரங்களில்
தொலைவதல்ல
தூரங்களை
தொலைப்பதுதான்
காதல்
************************
உன்னைப்
பத்திரப்படுத்துவதற்காகவே
பக்கத்தில்
வைத்திருக்க
ஆசைப்படுகிறேன்....
நீ உறங்கும்
பொழுதுகளில்
விழித்திருப்பேன்
உன்
உறக்கம் களையாமல்
பார்த்துக்கொள்வதற்காக...
******************************
புன்னகையை
தொலைப்பது
வதம்...
உன் புன்னகையில்
தொலைவது
வரம்...
******************
உன் ஒருநாள்
சந்தோஷத்திற்காக
என் ஆயுளின்
சந்தோசத்தையே
அடகு வைப்பேன்...
******************
உன் மௌனங்களில்
தற்கொலை செய்யும்
வார்த்தைகளை
காப்பாறிக்
கொள்வதற்காகவே
நான் கவிதை
எழுதக் கற்றுக்கொண்டேன்...
*********************
என்றோ
இறந்துவிட்ட
என்னுள்
என்றோ
உனக்காக
சேமித்து
வைத்த
உயிர்த்துளிதான்
இன்னும்
துடித்துக் கொண்டிருக்கிறது...
நீ காதலித்து விடுவாய்
என்ற நம்பிக்கையில்தான்
இன்னும் உயிர்வாழ்ந்து
கொண்டிருக்கிறது
காதல்....
****************************
எனக்கு
ஆயுசு
இரண்டு
எனக்கான என்
வாழ்க்கை
முடிந்து போனாலும்
உனக்கான
என் வாழ்க்கை
தொடரும்......
இப்படிக்கு
காதலிப்பவர்கள்
எல்லோரும்.
8.04.2009
கேள்வி பதில்
அஜீரணம்
கழிந்து
போகின்ற
ஒவ்வொரு நாளும்
என் ஆயுளின்
ஒரு நாள்
என்று
தெரிந்தாலும்
ஒரு நாளைக்கூட
என்னால்
சேமிக்க
முடிந்ததில்லை...
காரணம்
நேற்று
நாளை
இரண்டிலும்
இன்றுபோல்
இருபத்தி நாலு
மணிதான்....
இருந்தாலும்
நேற்றில்
நாளையில்
இருக்கும்
ஒரு நிமிஷத்தைக்கூட
கூட
இன்றில்
கண்டு பிடிக்க
முடியவில்லை...
Subscribe to:
Posts (Atom)