2.23.2010

வாழ்க்கை நிறையக் கவிதை 6

ஆயிரமோ
ரெண்டாயிரோமோதான்
கொடுத்துவிட்டுப்
போனான்...
எல்லோரும்
சொன்னார்கள்
கற்பிழந்தவள்
என்று

சீ
கற்பின் மதிப்பு
இவ்வளவுதானா?



..........................................

வேலைக்களைப்பைப்
போக்க குடித்தவன்
இழந்தான்
மனைவி தரும்
தேனீரில்
இருக்கும்
போதையை...

...........................................

குழந்தையின்
முதல் அழுகை
உணர்த்தியது
பிர சவம்
அல்ல
பிற சுகம்

............................................


எனக்கு
மட்டுமே
தெரிந்த ஒரு
ரகசியத்தை
சொல்ல நினைத்த
போதுதான்
அறிந்து கொண்டேன்
ஏற்கனவே
என்னை
அது
கொன்று விட்டிருந்தது...



.....................................................


தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
கடவுள் சொன்னதை
கடைமுன்னே
எழுதிவைத்தான்
வட்டிக்கடைக்காரன்...


.....................................................

4 comments:

Anonymous said...

நல்லாயிருக்கு மயாதி...

தர்ஷன் said...

முதற் கவிதை அருமை
கடைசிக் கவிதையில் அதை சொல்வதற்கான தகுதி கடவுளிலும் கடைக்காரனுக்கு கொஞ்சம் அதிகம் என நினைக்கிறேன்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நன்றாயிருக்கிறது.

மயாதி said...

நன்றி
தமிழரசி
தர்ஷன்
அன்புடன் அருணா
ஸ்ரீ